
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் ரசிகர்களால் செல்லமாக ‘டான்’ என்றும் அழைக்கப்படுகிறார். 1980-ம் ஆண்டு நாடகம் மற்றும் தொலைக்காட்சியில் பணிபுரிந்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்த ஷாருக்கான், 1992ல் ‘தீவானா’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைவுலகில் நுழைந்தார். அந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தாலும், அதனை தொடர்ந்து வெளிவந்த பாசிகர், தர் போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்து அவரை முன்னனி ஹீரோக்கள் வரிசையில் நிறுத்தியது. கபி ஹான் கபி நா, கரண் அர்ஜூன், தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, பர்தேஸ், தில் தோ பாகல் ஹை, தில் சே, குச் குச் ஹோத்தா ஹை, பாட்சா, ஃபிர் தில் பி ஹை இந்துஸ்தானி, தேவ்தாஸ் போன்ற படங்கள் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றே சொல்லலாம்.
1995-ம் ஆண்டில் வெளியான ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் அவரை, கான் நட்சத்திரத்திலிருந்து சூப்பர் ஸ்டாராக ஏற்றம் பெறுவதற்கான படமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் வெளியான அன்றிலிருந்து மும்பை உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் ஆயிரம் வாரங்கள் தாண்டி தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிப்பை தாண்டி படங்களையும் தயாரிக்கும் நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கௌரி கானுடம் இணைந்து ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார்கள். இது நிறுவனம் மெயின் ஹூன் நா , ஓம் சாந்தி ஓம் மற்றும் ஜவான் போன்ற வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்துள்ளது.
2008-ம் ஆண்டில் அவர் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐ.பி.எல்) அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளராகவும் இருக்கும் ஷாருக்கான் தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். நடிகர் ஷாருக்கான் 2007-ம் ஆண்டில் ‘கவுன் பனேகா குரோர்பதி’யின் ஒரு சீசனை தொகுத்து வழங்கினார்.
இதற்கிடையில் தனக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை இருப்பதாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இவரின் இந்த மூடநம்பிக்கையை கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். பெரிய சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு மூடநம்பிக்கையாக என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனது மூடநம்பிக்கை பற்றி அவர் கூறுகையில், நான் நடிக்கும் படத்தில் நான் ‘ஓடுகிற' மாதிரி காட்சிகள் இருந்தால் அந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் ‘டார்', ‘கரன் அர்ஜூன்', ‘தில்வாலே' போன்ற பல படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் ரீ-ரிலீசாகியுள்ள ‘கொய்லா' படத்தில் நான் நிறைய ஓடினேன். சில நேரங்களில் நாய்களை பின் தொடர்கிறேன் என்றும் சில நேரங்களில் வில்லன்களை பின் தொடர்கிறேன், வில்லன்களுக்கு பயந்து ரெயில்களை பின் தொடர்கிறேன் என்று கூறினார். இவ்வாறு கூறிய அவர் நான் படத்தில் ஓடினால் படம் வெற்றி பெறும் என எனக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை உண்டு. இதை மூட நம்பிக்கை என்றும் சொல்லலாம், என்று குறிப்பிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
ஜவான், டங்கி வெற்றிக்குப் பின் நடிகர் ஷாருக்கான் கிங் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மூடநம்பிக்கைகளுக்கு பாமரமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் விதிவிலக்கல்ல என்பதற்கு ஷாருக்கானின் இந்த கருத்து ஒரு உதாரணம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.