பாக்ஸ் ஆபிஸ் மாயாஜாலம்: ரசிகர்களின் மனதை வாசிப்பது எப்படி?

ஒரு படம் பிளாக்பஸ்டர் ஆக என்ன தேவை? திரையரங்குகளை நிரப்பும் நிஜக் காரணங்கள்.
சினிமா வெற்றி
சினிமா வெற்றிAI image
Updated on

ப்போதைய படங்களின் வெற்றி எதை முழுமையாகச் சார்ந்துள்ளது? உண்மையில் ரசிகர்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள்? இந்தியாவிலோ அல்லது உலக அளவிலோ, ஒரு திரைப்படத் தயாரிப்பின் வழிகாட்டும் சக்தியாக ‘பார்வையாளர் கண்ணோட்டம்’ தான் முதல் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் உள்ள திரைப்பட ஆரம்பத் தயாரிப்பு பெரும்பாலும் வெகுஜன சினிமா ரசிகர்கள், குறிப்பிட்ட ரசிகர் வட்டத்திற்கான கதை(niche storytelling) என்று இவ்விரண்டிற்கும் இடையில் சமநிலைப் படுத்தப்படுகிறது.

ஆனால், இறுதியில் படத்தின் வெற்றி கொண்டாட்டம் என்னவோ ‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலே வைத்தே உள்ளது. உலக அளவில் இருக்கும் படத் தயாரிப்புகளும் பார்வையாளர்களின் முந்தைய வரவேற்பைத்தான் பெரிதும் நம்பியுள்ளன. இருப்பினும் சில பிராந்தியங்களுக்கு ஏற்ப அதன் போக்குகள் வேறுபடுகின்றன.

நட்சத்திர பலத்தை விஞ்சும் சினிமா வெற்றி எது?

இந்தியாவில், ஒரு திரைப்படத்தின் வெற்றி பெரும்பாலும் அதன் பிரம்மாண்டம் அல்லது நடிகர்களின் நடிப்பைவிட, அதன் கதை சொல்லும் வலிமையால் தீர்மானிக்கப்படுகிறது. நட்சத்திரப் பலமும், பிரம்மாண்டமும் ஆரம்பக்கட்டப் பார்வையாளர் வருகைக்கு உத்தரவாதம் அளித்தாலும், கதைக்களம் பார்வையாளர்களிடம் எந்த அளவிற்கு எதிரொலிக்கிறது என்பதைப் பொறுத்தே தொடர்ச்சியான வசூல் அமைகிறது.

ஒரு ஈர்க்கக்கூடிய கதை, மிகவும் ஆடம்பரமான தயாரிப்புகளைக்கூட விஞ்சும் என்பதை பல படங்கள் நிரூபித்தன. உலக அளவிலும் இதேபோன்ற போக்குகள் காணப்படுகின்றன. தென்கொரியாவின் பாரசைட்(Parasite) அல்லது அமெரிக்காவின் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்(Everything Everywhere All at Once) போன்ற படங்களில் காணப்படுவதுபோல தனித்துவத்தையும், உணர்ச்சி ஆழத்தையும் இணைக்கும் படங்களுக்குப் பார்வையாளர்கள் வெகுமதி அளிக்கிறார்கள்.

பார்வையாளர்களின் கருத்தை அறிய சினிமா வெற்றி ஆய்வு ஏன் அவசியம்?

உலகளவில் தென் கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குத் தெளிவான, ஆக்கப்பூர்வமானக் கருத்துகளை வழங்குவதில் பெயர் பெற்றவையாகத் திகழ்கின்றன. அவர்களின் பார்வையாளர்கள் கதை தரம் மற்றும் கலாச்சார நுணுக்கங்களில் அதிக கவனம் செலுத்துவதால்; எந்தக் கதைத்தளம் வெற்றி பெறும் என்பதற்கான நம்பகமான குறிகாட்டிகளாக அவர்கள் திகழ்கிறார்கள்.

சினிமா வெற்றி
சினிமா வெற்றிAI Image

இதற்கு மாறாக, இந்தியப் பார்வையாளர்கள் ஓரளவிற்குக் கணிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். நகர்ப்புறப் பார்வையாளர்கள் வலுவான திரைக்கதைகளுக்கும், யதார்த்தத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், கிராமப்புற மற்றும் வெகுஜனப் பிரிவினர் பெரும்பாலும் பிரம்மாண்டம், இசை மற்றும் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட கண்கவர் காட்சிகளையே விரும்புகிறார்கள்.

இந்த இருமுனை தன்மை எந்த வகையான திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் என்பதைத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கணிப்பதை சவாலானதாக ஆக்குகிறது. இதேபோல், அமெரிக்காவில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெற்றி பெற்ற தொடர் திரைப்படங்களும் இருக்கின்றன. அதற்கு இணையாக பல சுயாதீனத் திரைப்படங்களும்(indie films) அங்குள்ள ரசிகர்கள் நல்ல வரவேற்பைத் தருகிறார்கள். இதனால் மக்களால் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் எப்போதும் அங்கு ஒரே சீராக இருப்பதில்லை; ஒரு பிளவுபட்ட சந்தையையாகவே(split movie market) பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மெகா சீரியல்களை நெட்டிசன்கள் வறுத்தெடுப்பது ஏன்? ஓர் அலசல்!
சினிமா வெற்றி

இதற்கானத் தரவுகள் எங்கிருந்தெல்லாம் பெறப்படுகிறது?

சினிமா மீதான பார்வையாளர்களின் கண்ணோட்டங்கள்(Audience perspective) குறித்த தகவல்கள், பல நம்பகமான துறைசார் அறிக்கைகள், வசூல் நிலவரங்கள் மற்றும் திரைப்பட வாரியங்களால் பெறப்படுகிறது. இவையெல்லாம் திரைப்படக் கல்வித்துறை ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய பொழுதுபோக்கு முகமைகள் நடத்தும் கலாச்சார ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் ஒரு பட வெற்றியை எது இயக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக; பார்வையாளர்களின் நடத்தைகள், டிக்கெட் விற்பனை, மற்றும் கருத்துகளைக் கண்காணிக்கின்றன.

திரைப்படச் சங்கம், தேசிய திரைப்பட வாரியங்கள் (இந்தியாவின் CBFC மற்றும் NFDC போன்றவை), மற்றும் உலகளாவிய ஊடக போக்குகளில் நிபுணத்துவம் பெற்ற சுதந்திரமான ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களால் தரவுகள் தொகுக்கப்படுகின்றன. இதன்மூலம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களின் விருப்பங்கள் குறித்த நம்பகமான நுண்ணறிவுகளைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கருப்பு படத்தின் வெற்றி... ஒரே அடியாக சம்பளத்தை ஏற்றிய சூர்யா... இத்தனை கோடியா!
சினிமா வெற்றி

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், ஒரு திரைப்படம் வெறும் நட்சத்திரப் பலத்தால் மட்டும் வெற்றி பெற முடியாது என்பதையும், கதையின் ஆழமே நீண்டகால வணிக வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். திரையுலகின் போக்கை முன்கூட்டியே கணிக்கும் நுணுக்கங்களை இது உங்களுக்கு வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com