'கங்குவா' தோல்விக்கு பழிதீர்த்த 'சூர்யா'வின் 'ரெட்ரோ'

ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ரெட்ரோ உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்துள்ளதால் தயாரிப்பு நிறுவனம் குஷியடைந்துள்ளது.
Retro Movie
Retro Movie
Published on

தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகர்களில் ஒருவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு கடந்த சில காலமாக வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தோல்வி படங்களாக அமைந்தது என்று சொல்லலாம்.

இந்நிலையில் கடந்தாண்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் வெளியாகி எதிர்மறை விமர்சனமே மிஞ்சியது. அதுமட்டுமின்றி இந்த படம் ரூ.180 கோடி வரையில் நஷ்டத்தை கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கங்குவா படத்தை இணையதளத்தில் அதிகளவு ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

கங்குவா படுதோல்வி அடைந்ததால், ரெட்ரோ படத்தின் மூலம் சூர்யா கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் கடந்த மே 1-ம்தேதி தொழிலாளர் தினம் அன்று வெளியானது.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், விது, பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாஷிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தில் நடிகை ஸ்ரேயா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார்.

சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரொ’வை அவரது 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பும் சந்தோஷ் நாராயணன் இசையும் மக்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் காதல், ஆக்சன் கதையில் வெளியான ரெட்ரோ படம் சூர்யாவிற்கு ஒரு தரமான கம்பேக் படமாக அமைந்ததா என்றால் அது கேள்விக்குறி தான்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ரெட்ரோ - படத்தின் மிகப்பெரிய பலம் 'சூரியா'!
Retro Movie

இப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக முதலுக்கு மோசமின்றி தப்பித்தது என்றே சொல்ல வேண்டும். படம் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவித்த படக்குழு அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு வைர மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில் உலகளாவிய வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி மே 18-ம் தேதி நிலவரப்படி இந்த படம் ரூ.235 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இது போஸ்டரில் திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி உரிமம், பாடல் உரிமம், டிவி ஒளிபரப்பு உரிமம் என ஒட்டுமொத்ததையும் சேர்த்து என தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ரெட்ரோ உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்துள்ளதால் தயாரிப்பு நிறுவனம் குஷியடைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் மூலம் சூர்யா கம்பேக் கொடுத்து விட்டதாகவும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
தனுஷின் 'குபேரா' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
Retro Movie

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com