கார்மேனி செல்வம் திரைப்பட விமர்சனம்!

Carmeni Selvam
Carmeni Selvam
Published on
ரேட்டிங்(2.5 / 5)

ஸ்ரீ ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, லக்ஷ்மி பிரியா, கெளதம் மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கார்மேனி செல்வம்.

சமுத்திரக்கனியின் பெயர் செல்வம். இவர் கெளதம் மேனனிடம் கார் டிரைவராக பணிபுரிகிறார். மிகவும் விசுவாசமாக இருக்கிறார். ஒரு நாள் கௌதம் மேனன் தன் மகளுடன் அயல் நாடு செல்கிறார். கெளதம் மேனன் காரை கால்டாக்சி காராக மாற்றி ஓட்டுகிறார் கனி. கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்கிறார். கடன் வாங்கிய தனது மச்சானால் அவமானப்படுத்த படுகிறார். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பணம் சம்பாதிக்க ஷார்ஜா செல்கிறார். சமுத்திரகனி வெளிநாட்டில் பணம் சம்பாதித்து கடனை அடைத்தாரா? கெளதம் மேனனுக்கு இவர் தனது காரை கால்டாக்சியாக பயன் படுத்திய விஷயம் தெரிந்ததா? என்று சொல்கிறது கிளைமாக்ஸ்.

நடுத்தர குடும்பத்தில் பலர் சந்திக்கும் ஸ்கூல் பீஸ், பணம் இல்லாததால் உறவுகளின் விசேஷங்களில் அவமானப் படுத்தப்படுவது என பல நாம் சந்தித்த, பார்த்த அனுபவங்களின் வழியே படம் செல்கிறது. இந்த அனுபவ காட்சிகளை நாம் ரசிக்க முடிந்தாலும் படத்தின் கதை ஒரு மையப் புள்ளியை நோக்கி நகராமல் இருப்பது சற்று மைனஸாக உள்ளது. கெளதம் மேனன் சமுத்திரகனி செய்த தவறை கண்டுபிடித்தாரா என்று நாம் செல்வதற்குள் கதை வேறு திசையில் சென்று விடுகிறது.

கதை செல்லும் விதம் சுவாரசியம் இல்லாவிட்டாலும், எமோஷனல் காட்சிகள் நம்மை கனெக்ட் செய்து விடுகிறது. உதாரணமாக உறவினர் வீட்டில் லக்ஷ்மி பிரியா அவமானப்படுத்தபடும் காட்சி, அப்பா வராததால் பள்ளி விழாவுக்கு மகன் தவிக்கும் இடம், ஷார்ஜாவில் உள்ள ரூம் நண்பர்கள் பேசும் வசனங்கள் போன்ற காட்சிகளை சொல்லாம். ராகவ் ரமேஷ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
Interview: "முள்ளிவாய்க்காலோடு நாங்கள் முடிந்துவிடவில்லை!" - ஈழத்து இயக்குநர் சோமீத்ரனின் அதிரடி நேர்காணல்!
Carmeni Selvam

படத்தில் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவது லக்ஷ்மி பிரியா தான். கணவன் சீர் செய்ய முடியாமல் தவிக்கும் இடத்திலும், கணவனை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு தவிப்பதும், கிளைமாக்ஸ் காட்சியில் அழும் இடத்திலும் லக்ஷ்மி ப்ரியா நம் வீட்டு பெண்களை நினைவு படுத்துகிறார். சமுத்திரகனி வழக்கமாக அறிவுரையை செய்வதை விட்டு விட்டு சிறப்பாக நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் துன்பப்படும் ஒரு மலையாளியின் வாழ்க்கையை சிறப்பாக சொன்ன 'ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்' என்ற படம் கேரளா தாண்டி பல இடங்களில் வரவேற்பை பெற்றது.

கார்மேனி செல்வம் படத்தின் திரைக்கதையையும் சிறப்பாக அமைத்திருந்தால் கார்மேனி செல்வம் படமும் இங்கே குறிப்பிட்ட படம் போல் சிறப்பாக வந்திருக்கும். இருந்தாலும் உணர்ச்சி பூர்வமாக ஒரு நடுத்தர குடும்ப கதையை சொன்னதற்காக இப்படத்தை பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com