பிரபலங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள்! - நாகார்ஜுனா!

Nagarjuna
Nagarjuna
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா பல வருடங்களுக்கு முன்னர் அளித்தப் பேட்டியில், சில பிரபலங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்று பேசியிருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் பணக்கார திருமணம் என்றால், அது சமீபத்தில் நடந்த அனந்த் அம்பானி திருமணம்தான்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் கடந்த ஜூலை 12 முதல் 14 வரை கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஹாலிவுட் பிரபலம் முதல் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் வரை கலந்துக்கொண்டு அசத்தினர். மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு அம்பானி குடும்பத்தினர் சுமார் 5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 9000 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

இதனால், அம்பானி குடும்பம் குறித்தான, புரளிகளும், மீம்ஸ்களும் ஏராளம் பகிரப்பட்டன. குறிப்பாக, ரீசார்ஜ் விலையேற்றம் செய்யப்பட்டது பேசுபொருளாக மாறியது.

இதனையடுத்து, வெளிநாட்டு பிரபலங்கள் காசு கொடுக்கப்பட்டே திருமணத்திற்கு வந்தார்கள் என்று சொல்லப்பட்டது. மேலும் சில பிரபலங்கள் எவ்வளவு விலைக்கொடுத்து வரவழைக்கப்பட்டனர் என்ற செய்தியும் வெளியானது. ஆனால், அந்த பிரபலங்களால் இசை நிகழ்ச்சி போன்றவையும் நடத்தப்பட்டது. ஆனால், இந்திய பிரபலங்கள் அனைவரும் அழைக்கப்பட்ட விருந்தினராக மட்டுமே வரவழைக்கப்பட்டனர் என்று சொல்லப்பட்டது.

இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்னர், நாகார்ஜுனா அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா இந்தியா முழுவதுமே பிரபலமானவர். இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பதினாறு வயதில் தனுஷ் கண்ட கனவு! 'ராயன்' ஆடியோ லாஞ்சில் வெளியானது சீக்ரெட்!
Nagarjuna

இவர் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில், திருமணங்களில் கலந்துகொள்ள சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த விஷயம் அப்போது பேசப்படவில்லை. ஆனால், இப்போது வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இவர் சொன்ன இந்த விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. எப்போதோ சொன்ன விஷயம் இப்போது இந்தியா முழுவதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், ரசிகர்கள் “அப்போ புரில, இப்போ புரிது” என்று அம்பானி குடும்பத்தை டேக் செய்து வருகின்றனர்.

 

logo
Kalki Online
kalkionline.com