CBFC திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மீது தொடரும் லஞ்ச புகார்.. விஷாலை தொடர்ந்து சமுத்திரகனி குற்றச்சாட்டு!

cbfc certificate
cbfc certificate
Published on

த்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) திரைப்படங்களுக்கு தனிக்கை மற்றும் வரி விலக்கு சான்றிதழ் அளிக்க லஞ்சம் கேட்பதாக சமீபத்தில் நடிகர் விஷால் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தான் தயாரித்த ’அப்பா’ படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் பெற லஞ்சம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் என்றழைக்கப்படும் (CBFC) மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகத்தின் சட்டப்பூர்வ திரைப்பட சான்றிதழ் அமைப்பாகும்.  இது "சினிமாட்டோகிராஃப் சட்டம் 1952 இன் விதிகளின் கீழ் திரைப்படங்களின் பொது கண்காட்சியை ஒழுங்குபடுத்துதல்" என்று பணிக்கப்பட்டுள்ளது.

சினிமாட்டோகிராஃப் சட்டம் 1952 பொது இடங்களில் காட்டப்படும் வணிகப் படங்களுக்கு கடுமையான சான்றிதழ் செயல்முறையை கோடிட்டுக் காட்டுகிறது. திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் திரையிடப்படும் திரைப்படங்கள், வாரியத்தின் சான்றிதழ் மற்றும் திருத்தப்பட்ட பின்னரே இந்தியாவில் பொதுக் காட்சிக்கு அனுமதிக்கப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப படங்கள் U,A, UA,S என்ற சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

இவ்வாறு படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் பொறுப்பை கொண்டுள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் சமீபத்தில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை மகாராஷ்டிராவில் வெளியிடுவதற்கு மும்பையில் உள்ள திரைப்பட சான்றிதழ் வாரியமான லட்சம் கேட்டதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
லஞ்சம் வாங்கிய சென்சார் போர்டு.. நடிகர் விஷால் அதிரடி புகார்!
cbfc certificate

இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்ற இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி, தான் தயாரித்த ’அப்பா’ படத்திற்கு வரி விலக்கு சான்றிதழ் அளிக்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான (CBFC) லஞ்சம் கொடுக்கவேண்டியிருந்தது. இதுபோன்ற சமூக வழிப்புணர்வு படங்களை அரசு முன்வந்து எடுத்திருக்கவேண்டும் என்றார்.

மேலும், தற்போது செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் விமர்சகர்தகளாக மாறிவிட்டார்கள். யார் என்ன விமர்சனம் செய்தாலும் தரமான படமாக இருந்தால் ஓடும். இதற்கு உதாரணமாக போர்த் தொழில் நிறைய படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com