

.கிறிஸ்டோபர் நோலன் பிலிமோகிராபியை ஆராய்ந்து பார்த்தால் பல ஆச்சரிய உண்மைகள் கிடைக்கும். முதல் படமான Following (1998) பலரது கவனத்தையும் ஈர்த்தது. இரண்டாவது படமான Memento (2000) மெகாஹிட் ஆகி வசூல் சாதனை செய்தது. இந்தப் படத்தின் கதையைத்தான் பட்டி டிங்கரிங் பண்ணி ஏ ஆர் முருகதாஸ் சூர்யாவின் நடிப்பில் கஜினி உருவாக்கினார்.
Insomnia (2002), Batman begins (2005) ,The Prestige (2006), The Dark knight (2008), Inception (2010) , The dark Knight rises (2012), Man of Steel (2013), Interstellar (2014), Dunkirk (2017),Tenet (2020) , Oppenheimer (2023) என்று கடந்த 25 வருடங்களில் 13 முத்தான படங்களைக் கொடுத்தவரின் 14 வது படம் தான் இந்த தி ஒடிசி.
250 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் 17,000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது! (ஜனநாயகன் 3000 தியேட்டர்கள்)
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மன்னர் ஒடிசி. இத்தாகா அரண்மனையில் வசிப்பவர். நாயகி மனைவி பினோலோப்பிக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. குடும்ப வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும். இனி போர் எல்லாம் வேண்டாம். அக்கப்போர் என மன்னர் முடிவெடுக்கிறார்.
அப்போது மெலோனஸ் என்ற மன்னர் இவரைப் போருக்கு அழைக்கிறார். உதவி கேட்கிறார். ஆல்ரெடி மன்னர் உதவுவதாக வாக்களித்திருந்தார்.
என்ன பிரச்னை எனில், மெலோனஸ் என்ற மன்னரின் மனைவியை ட்ராய் என்ற மன்னன் காதல் வலையில் விழ வைத்து அவளை அழைத்து சென்று விட்டான். இப்போது மனைவியை மீட்க வேண்டும். அதற்குத்தான் மன்னர் உதவி தேவை.
போருக்குப் போகும் முன் மன்னர் ஒடிசி தன் மனைவியிடம் சொல்லி விட்டுப் போருக்குக் கிளம்புகிறார். "இந்தக் கைக்குழந்தை வளர்ந்து பெரியவன் ஆகி தாடி ,மீசை எல்லாம் வளர்வதற்குள் நான் திரும்ப வந்து விடுவேன். ஒருவேளை நான் வராவிடில் நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்" என்று கூறி விட்டு போருக்குக் கிளம்புகிறார்.
போர் 10 வருடங்கள் நடக்கிறது. போர் முடிந்தபாடில்லை. சரண் அடையத் தீர்மானிக்கிறார்கள். அதற்கு முன் கடைசியாக ஒரு முயற்சி. ராட்சச வடிவத்தில் பிரம்மாண்டமாய் இருக்கும் ஒரு மரக்குதிரை சிலை கொண்டு வரப்படுகிறது. அதைப் பார்த்ததும் எதிரி 'நாயகன் மன்னர் ஒடிசி தோல்வியை ஒத்துக்கொண்டார்; தான் சரணடைவதன் சின்னமாக இந்த மரக்குதிரையைப் பரிசாக அளித்திருக்கிறார். இதை நாம் அரண்மனைக்குள் கொண்டு போய் மக்களிடம் காட்டி வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறான்.
அதே போல் ராட்சச மரக்குதிரை அரண்மனைக்குள் கொண்டு போகப்படுகிறது. அப்போது தான் நாயகன் மன்னர் ஒடிசியின் திட்டம் வெளியாகிறது. கோட்டைக்குள் நம்மால் நேர் வழியில் போராடி உள்ளே போக முடியாது. குறுக்கு வழியில் போனால் தான் உண்டு எனப்போட்ட திட்டம் தான் இது.
அந்த ராட்சச மரக்குதிரைக்குள் நாயகன் மன்னர் ஒடிசியும், அவரது வீரர்களும் பதுங்கி இருக்கிறார்கள். அரண்மனைக்குள்ளே கொண்டு செல்லப்பட்டதும் திட்டமிட்டபடி வெளியே வந்து எதிரி ட்ராயை நாயகன் ஒடிசி வீழ்த்தி விடுகிறார்.
இங்கே நிலைமை இப்படி இருக்க நாயகன் மன்னர் ஒடிசியின் மனைவி நாயகி பினோலோப்க்கு ஒரு பிரச்சனை. அருகே இருக்கும் குட்டி குட்டி தேசத்து மன்னர்கள் ஒன்று கூடி, "எங்களில் யாரையாவது திருமணம் செய்து கொள். போருக்குப்போன உன் கணவன் இனி வர மாட்டான்.10 வருடம் ஆகி விட்டது" என டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நாயகன் மன்னர் ஒடிசியும் , அவரது போர் வீரர்களும் ஒரு தீவில் தங்கி இருக்கிறார்கள். அங்கே அழகழகான தாமரை மலர்கள் கிடைக்கின்றன. அது போதை தரக்கூடியவை. அதை சாப்பிட்டால் தன்னிலை மறப்பார்கள். வீட்டுக்குப் போகவே தோன்றாது. இந்த விஷயமே முதலில் தெரியாமல் போதையில் கட்டுண்டு கிடந்த நாயகனும், வீரர்களும் பின் அதை உணர்ந்து தப்பி செல்கிறார்கள்.
இன்னொரு தீவில் ஒரு ஒற்றைக்கண் ராட்சசன் இருக்கிறான். அவனை சமாளித்து கடக்கும்போது சூறாவளிக்காற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இங்கே ஒரு சூனியக்காரி இருக்கிறாள். அவள் மனிதர்களை மிருகங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளை சமாளிக்க ஒருத்தி உதவி செய்கிறாள். அந்தப் பெண்ணைப் பிடித்துப்போய் அவளுடன் சில காலம் கழிக்கிறார் நாயகன்.
சூரியக்கடவுளுக்கு சொந்தமான கால்நடைகள் மீது கை வைக்க வேண்டாம் என்ற நிபந்தனையை மீறி நாயகனின் வீரர்கள் ஆடுகளைக் கொன்றதால் அவர்கள் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அந்தப் பெண்ணின் காதல் வலையில் விழுந்த நாயகன் மன்னன் ஒடிசி, எப்படியோ தன் நாட்டின் எல்லைக்கு வருகிறான்.
இப்போது நாயகனின் எதிரிகள் நாயகனை உள்ளே வராமல் தடுப்பார்கள் என்பதால் வயதான ஆள் போல் வேடமிட்டு நாயகன் வருகிறான்.
கிட்டத்தட்ட சுயம்வரப்போட்டி போல் நடக்கிறது. நாயகியை அடைய ஆளாளுக்குப் போட்டி போட, நாயகனும் அவர்களில் ஒருவராக மாறு வேடத்தில் சண்டை இடுகிறார்.
மொத்தம் 20 வருடங்கள் இடை வெளிக்குப்பின் நாயகன் நாயகியை சந்திக்கிறான்.
அவ்வளவு தான் கதை.
நாயகன் ஒடிசியஸ் ஆக மேட் டேமன் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது சிக்ஸ் பேக் ஜிம் பாடி உழைப்புக்கு, மெனக்கெடலுக்கு ஒரு சான்று. இவருக்கு பல விருதுகள் நிச்சயம். ஆஸ்கார் லட்சியம்.
நாயகியாக பினோலோப் கேரக்டரை ஏற்று நடித்த அன் ஹேத்வே இயற்கையான நடிப்பு , அழகு முகம், வசீகர சிரிப்பு எல்லாம் கலந்து கட்டிய தேவதை.
நாயகன், நாயகி இவர்களின் மகனாக டாம் ஹோலந்த் நடிப்பு கச்சிதம்.
வில்லனாக ஆண்ட்டினஸ் கேரக்டரில் ராபர்ட் பேட்டின்சன் மிரட்டலான நடிப்பு.
மற்ற அனைத்துக் கேரக்டர்களும் அவரவருக்குத் தந்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்.
டெக்னிக்கல் டீமைப் பொறுத்தவரை கிறிஸ்டோபர் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹோய்ட் வான் ஹோடம , ஆஸ்தான எடிட்டர் ஜெனிபர் லேம் , ஆஸ்தான இசை அமைப்பாளர் லட்விக் கோரன்சன் மூவருமே கலக்கி இருக்கிறார்கள்.
படத்தின் ரன்னிங் டைம் 173 நிமிடங்கள்.
படத்தின் உண்மையான தன்மையை உணர விரும்புபவர்கள், ஆங்கில வெர்சனில் பார்க்கலாம். கதை புரியாது என்று நினைப்பவர்கள் மட்டும் தமிழ் வெர்ஷனைப்பார்க்கலாம்.
ஹோமர் எழுதிய பிரபல நாவலான ஒடிசியைத் தழுவி திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.
சபாஷ் டைரக்டர்
பிரம்மாண்டமான மரக்குதிரை வடிவமைப்பில் ஆர்ட் டைரக்டர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
ஐ மேக்ஸ் தியேட்டரில் பார்க்கும்போது கடல் அலைகளின் சீற்றங்களை நேருக்கு நேர் கண்டு ரசிப்பதைப்போல உணர்த்திய விதம் அருமை.
கிராபிக்ஸ் காட்சிகள் , விஷூவல் எபக்ட்ஸ் எல்லாமே உயர் தரம். பிரம்மாண்டம்.
நாயகன், நாயகி , வில்லன் மூவரின் நடிப்பும் பிரமாதம்.
க்ளைமாக்சில் வரும் சுயம்வரம் காட்சி பிரம்மாண்டம், பிரமிப்பு.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+