பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும் நோலனின் 'தி ஒடிசி': ரூ.6170 கோடியை கடந்த பிரம்மாண்ட வசூல்!

ஹோமரின் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள தி ஒடிசி உலக அளவில் புதிய வசூல் சாதனைகளை படைக்கிறது.
The Odyssey Box office
The Odyssey Business Today
Updated on

ஹாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் 'தி ஒடிசி' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். ஹோமர் எழுதிய புகழ்பெற்ற கிரேக்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தினை நோலன் உருவாக்கினார். உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த திரைப்படம் ஜூலை 17-ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்தும் இதன் வசூல் வேகம் குறைய வில்லை. வெளியான நாளிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியான வசூல் வேட்டையை தி ஒடிசி திரைப்படம் நடத்தி வருகிறது. தற்போது வெற்றிகரமாக 10 நாட்களை சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் கடந்து சாதனைப் படைத்து வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றி, கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்து வருகிறது.

மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட தி ஒடிசி திரைப்படம் 250 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகியது.மேலும் இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படமாகவும் உள்ளது. இதில் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான மாட் டாமன், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், டாம் ஹொலாந்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, உலகளவில் இப்படம் முதல் 10 நாட்களில் 639 மில்லியன் டாலர் வசூலை எட்டியுள்ளது. அதாவது ​இந்திய மதிப்பில் சுமார் ₹6170 கோடிக்கும் அதிகமாகும். தி ஒடிசி ​படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனமான யூனிவர்சல் பிக்சர்ஸுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

​கிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வரவேற்பு தி ஒடிசி திரைப்படத்திற்கும் பெரிய அளவில் கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமே, இப்படம் இதுவரை ₹140 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளூர் ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது.

Box office record made The Odyssey
The Odyssey film Financial Times

மேலும் உலக அளவில் நல்ல வசூலையும் வாரி குவித்து வருகிறது. பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில் ₹444 கோடி , ​பிரான்ஸ் நாட்டில் ₹305 கோடி , ​இத்தாலியில் ₹277 கோடி , ஆஸ்திரேலியாவில் ₹198கோடி , ​ஜெர்மனியில் ₹196 கோடி , ​மெக்சிகோவில் ₹182 கோடி , ​ஸ்பெயின் நாட்டில் ₹148 கோடி , ​பிரேசிலில் ₹106 கோடி என்று வசூல் வேட்டையை நிகழ்த்துகிறது.

தி ஒடிசியின் ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்பிற்கு ஐமேக்ஸ் (IMAX) திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதி நாட்களில் இதற்கு டிக்கெட் கிடைப்பதே அரிதாகிவிட்டது. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் மீதான மதிப்பு , அவரது திரைப்படங்களில் இருக்கும் அறிவியல் மற்றும் நம்பகத்தன்மைமிக்க கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களைத் தொடர்ந்து திரையரங்குகளை நோக்கி ஈர்த்து வருகிறது.

​தி ஒடிசி திரைப்படம் நேர்த்தியான தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் , முழுவதுமாக ஐமேக்ஸ் கேமராக்களால் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. இதனால்,இந்த திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் காணும் போது, ரசிகர்களின் கண்களுக்கு பெரிய விருந்தாக அமைகிறது. அதேபோல் படத்தின் கதை பல நூற்றாண்டுகளாக உலகப் புகழ் பெற்ற காவியமாக இருப்பதால் , அதை திரையில் காணும் புதுமையான அனுபவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அம்மாவின் மரணம்... சந்தேக வளையத்தில் அப்பா! நெட்ஃபிலிக்ஸின் 'The Truthers' திரை விமர்சனம்!
The Odyssey Box office
logo
Kalki Online
kalkionline.com