

ஷாஹித் கபூர், கிருதி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே ஒன்றிணைந்து நடித்துள்ள படம் 'காக்டெய்ல் 2'.
இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை, ஜூன் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியது.இந்தப்படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு முதல் நாளிலேயே 27 கோடி வசூல செய்து சாதனை படைத்தது.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளதாலும், படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே இணையத்தைக் கலக்கியதாலும், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது. ஜாலி, காதல், காமெடி மற்றும் கிளாமர் நிறைந்த பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக வெளியாகியுள்ள 'காக்டெய்ல் 2' தியேட்டர்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதன் முதல் பாகம் 2012ல் வெளியாகியது.முதல் பாகமும்,இரண்டாம் பாகமும் வேறு வேறு கதைகள்.அதனால் முதல் பாகம் பார்க்காதவர்களும் இரண்டாம் பாகம் பார்க்கலாம்...புரியும். இதே டைட்டிலில் 2010-ல் மலையாளத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆனது.அந்த கதையும் வேறு.
ஸ்பாய்லர் அலர்ட் (Spoiler Alert) - கதைக்களம்:
நாயகன் ஒரு புகழ்பெற்ற ரெஸ்டாரண்ட்டில் செப் ஆக பணிபுரிகிறார்.நாயகியும், நாயகனும் பள்ளிப்பருவத்திலிருந்தே நண்பர்கள்.இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.இருவரும் இத்தாலி நாட்டுக்கு ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள்.இத்தாலியில் நாயகியின் தோழியை அதாவது வில்லியை சந்திக்கிறார்கள்.மூவரும் நண்பர்களாக பழகுகிறார்கள்.
ஒரு நாள் நாயகன் சரக்கடித்து மப்பில் இருக்கும்போது ஒரு விஷயத்தை உளறுகிறான்.என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் கள்ளக்காதல் ஏற்பட்டால் அதை என் வாழ்க்கைத்துணைக்குத்தெரியாதவாறு மறைத்து விடுவேன்.அந்த சாமார்த்தியம் எனக்குண்டு என்று உளறி விடுகிறான்.
நாயகி இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.தன் தோழியான வில்லியிடம் ஒரு உதவி கேட்கிறாள்.நீ என் காதலனிடம் நெருங்கிப்பழகு.உன்னிடம் வழிகிறானா?ப்ரப்போஸ் செய்கிறானா?வரம்பு மீறி நடந்து கொள்ள முயல்கிறானா?என்று எனக்கு ரகசியமாக ரிப்போர்ட் செய்" என்கிறாள்.வில்லியும் நாயகி பேச்சைக்கேட்டு நாயகனிடம் நெருங்கிப்பழகுகிறாள் பின் நாயகியிடம் ரிப்போர்ட் கொடுக்கிறாள்.நீ சந்தேகப்பட்டபடி எல்லாம் எதுவும் நடக்கவில்லை.உன் காதலன் நல்லவன் தான் என சர்ட்டிபிகேட் கொடுக்கிறாள்.
ஆனால் நாயகிக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நீ அவனிடம் இன்னமும் நெருங்கிப்பழகு என்கிறாள்.வில்லியும் நாயகனிடம் நெருங்கி பழகுகிறாள். இப்போது ஒரு விபரீதம் நடக்கிறது.நிஜமாகவே நாயகனும் ,வில்லியும் காதலிக்கத்தொடங்கி விட்டார்கள்.இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகனாக ஷாஹித் கபூர் ஸ்டைலிஷாக நடித்திருக்கிறார்.வீரா ரஜினி மாதிரி காத்து வாக்குல ரெண்டு காதல் விஜய் சேதுபதி மாதிரி,இரட்டை வால் குருவி மோகன் மாதிரி இரு பெண்களைக்காதலிக்கும் கேரக்டர். என்பதால் அந்தக்கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்.
நாயகியாக ராஷ்மிகா மந்தனா துடுக்குத்தனமான நடிப்பு.நாயகனிடம் கொஞ்சிப்பேசுவது ,டக்கென்று வில்லியிடம் டாஸ்க் கொடுப்பது என முகபாவனைகளை டக் டக் என மாற்றுவது அருமை.
வில்லியாக கிருதி சனோன் நடிப்பிலும் சரி ,கிளாமரிலும் சரி போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்.
இசை: ப்ரித்தம் இசையில் 6 பாடல்கள் உள்ளன. அதில் மூன்று பாடல்கள் ஹிட் ரகம். குறிப்பாக 'தும் ஹி ஹோ பந்து' பாடல் செம ஹிட். பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவு: சந்தானகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் இருவரின் கேமரா ஒர்க் படத்தை மிகவும் கலர்ஃபுல்லாகக் காட்டியுள்ளது.
படத்தொகுப்பு : அக்சரா பிரபாகரின் எடிட்டிங்கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகிறது.
இயக்கம்: லவ் ரஞ்சன் எழுதிய கதைக்குத் தருண் ஜெயின் மற்றும் லவ் ரஞ்சன் இருவரும் திரைக்கதை அமைக்க, ஹோமி அதஜானியா இப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குநரின் பிளஸ் பாயிண்ட்ஸ் (சபாஷ் டைரக்டர்):
1.ஒளிப்பதிவாளருக்குக் கொண்டாட்டம் தான். இத்தாலி நாட்டின் திராட்சைத் தோட்டங்களை அழகாகப் படம் பிடித்த விதம் மற்றும் இரு நாயகிகளின் கிளாமர் காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கிய விதம் அருமை.
2.பாடல்கள், லொகேஷன்கள், நாயகிகளின் காஸ்ட்யூம் என படம் முழுக்கவே வண்ணமயமாக உள்ளது.
3. வில்லியையும் காதலிக்கிறாயா? என்று நாயகி கேட்கும் போது நாயகன் சொல்லும் பதிலில் நேர்மை..புதுசா ஒன்றை பார்க்கும்போது மனம் அந்தப்பக்கம் சாயும் என்பது உண்மை தான், ஆனால் உன்னிடம் கொண்டது சின்சியர் லவ் என்று அவன் பேசும் வசனம் புதுமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள் :
1. படத்தின் மையக்கரு 2008ல் வெளியான விக்கி கிறிஸ்டினா பர்சிலோனா (Vicky Cristina Barcelona)படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆகி இருக்கிறார்கள்,ஆனால் அதற்கான கிரெடிட்டை டைட்டில் கார்டில் தரவில்லை.
2. படம் முழுக்க நாயகன், நாயகி, வில்லி மூவரும் லொடலொடவெனப் பேசிக்கொண்டே இருப்பது சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
3. நாயகி மாதிரி மடத்தனமாக யாரும் யோசிக்கவே மாட்டார்கள்.பஞ்சையும் ,நெருப்பையும் பக்கத்து பக்கத்தில் வைத்து டெஸ்ட் பண்ணுவதெல்லாம் தேவை இல்லாத ஆணி.
4. பின் பாதியில் யூகிக்கக்கூடிய திரைக்கதை அமைப்பு.புதிதாக எதுவும் இல்லை.ட்விஸ்ட் என்றெல்லாம் எதுவும் இல்லை.
அடல்ட் கன்டென்ட் வார்னிங் (Adult Content Warning): இத்திரைப்படம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது (18+).
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி ஜாலி,காமெடி,கககலப்பு,பின் பாதி இழுவை... லொக்கேஷன்,கிளாமருக்காக பார்க்கலாம்.
ரேட்டிங் 2.5 /5