தமிழ் சினிமா பேசத் தயங்கிய சேல்ஸ்மேன் வாழ்க்கை: 'கோல்ட் கால்' படம் எப்படி இருக்கு?

அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் பின்னணியை இயல்பாகச் சொன்னதா இந்தத் திரைப்படம்?
கோல்ட் கால்
கோல்ட் கால்
Updated on
ரேட்டிங்(3 / 5)

நமக்கு அதிகம் தெரியாத ஆனால் நாம் வீடுகளிலும் அலுவலகங்களில் அதிகமாக சந்திக்கும் சேல்ஸ்மேன் என்பவர்களை பற்றிய வாழ்க்கையை ஒரு கதையாக எடுத்து படமாக தந்துள்ளார் அறிமுக இயக்குனர் தம்பிதுரை. இந்த படத்தில் அறிமுகமானவர்கள் தமிழுக்கு புதிது. ஆனால் பிற மொழிகளில் நடித்துள்ளார்கள். சித்து மமூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், பாலாஜி ஆகியோர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சரி கதை என்ன?

ஒரு பிரபல நிறுவனம் தங்களது நிறுவனத்தின் பொருட்களை மற்ற டீலர்களுக்கு விற்க சேல்ஸ்மனை தேடுகிறது. அதற்கு நான்கு சேல்ஸ்மேன்களை நேர்காணல் செய்கிறது. நான்கு பேரும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று நான்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்த நான்கு பேருக்கும் மேனேஜர் கோல்ட் கால் என்பது என்ன?அது சேல்ஸ் விஷயத்தில் எவ்வளவு முக்கியம் என்றெல்லாம் புரிய வைக்கிறார். கிளையன்டை பார்க்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி ஃபீல்டுக்கு அனுப்புகிறார். இதில் சித்து தவிர பாக்கி மூன்று பேரும் பெரிய அளவில் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு வேலை செய்யவில்லை. 

சித்து மட்டும் கொடுத்த டார்கெட்டை அச்சிவ் செய்கிறார். ஒரு கட்டத்தில் சித்துவிற்கு அங்கே இருக்கும் ஒரு அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் வருகிறது. இதனால் அவர் டார்கெட்டை இழக்கிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் நான்கு பேரும் டார்கெட்டை காட்டவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மேனேஜர் சொல்கிறார். இந்த சூழ்நிலையில் இந்த நான்கு பேரும் ஒரு குழந்தையை கடத்தி விட்டதாக பழி விழுகிறது. காவல்துறை இவர்களை தேடுகிறது. இந்த பிரச்சினைகளிலிருந்து எப்படி தப்பித்தார்கள் டார்கெட்டை எப்படி பூர்த்தி செய்தார்கள்? என்று சொல்கிறது மீதி கதை.

கோல்ட் கால்
கோல்ட் கால்

படத்தின் பிளஸ். 

படத்தின் பிளஸ் என்பது எடுத்துக் கொண்ட கதைக்களம். நமக்கு அதிகமாக தெரியாத சேல்ஸ்மேன் வாழ்க்கையை படமாக எடுத்ததற்கு நாம் பாராட்டலாம். நான்கு பேரும் நன்றாக நடித்து உள்ளார்கள். அதிலும் ஆந்திராகாரராக நடிக்கும் ஸ்ரீ வைஷ்ணவ் மிக நன்றாகவும், அப்பாவித்தனமாகவும் நடித்துள்ளார். சித்து நன்றாக ஒரு உணர்வுபூர்வமாக நடக்கிறார். 

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு லேசினஸ், சிறிது துள்ளல் என்று பலவற்றை இந்த இளைஞர்கள் இயல்பாக கொண்டு நடித்திருக்கிறார்கள். பெங்களூர் போன்ற பல மொழிகள் பேசும் நகரத்தை சரியாக பதிவு செய்திருப்பது படத்தில் பாராட்டுக்கூடிய விஷயமாகும். படம் நகரும் விதம், இளைஞர்கள் மிகவும் கேஷுவலாக நடிக்கும் இடம் போன்றவை நாம் படத்திற்கு உள்ளே மனதை கொண்டு செல்ல ஒரு காரணமாக இருக்கிறது. படத்தில் பின்னணி இசை அளவாகவும் சுமாராகவும் உள்ளது. ஒளிப்பதிவு நாட் பேட்.

நிஷா சிறப்பாக நடித்துள்ளார். மேனேஜராக வருபவர் நடிப்பு இயல்பாக உள்ளது. ஒரு திரைப்படத்தின் மூலமாக சேல்ஸ்மேன் சிப்பை உணர வைக்கும் இடம், தன்னம்பிக்கை தரும் இடம் போன்றவை விஷயங்கள் நன்றாக உள்ளது.

கோல்ட் கால்
கோல்ட் கால்

படத்தின் மைனஸ் பாயிண்ட்.

படத்தின் கதைக்களம் புதிது. இதற்காக இன்னும் ஆழமாக சிந்தித்து இருக்க வேண்டும். இயக்குனர் நம்மில் பலருக்கு தெரியாத சேல்ஸ்மேனின் வாழ்க்கையை இன்னும் புரிய வைக்க சற்று மெனக்கட்டி இருக்க வேண்டும். சேல்ஸ் தொடர்பான இருக்கக்கூடிய பிரச்சனைகள் சேல்ஸ்மேனை நடத்தக்கூடிய விதம் போன்றவை சரியாக பதிவு செய்யப்படவில்லை. 

இதையும் படியுங்கள்:
தி டார்க் ஹெவன் விமர்சனம்: 7 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் மர்மம்… நிஜமாகவே சைக்கோ கொலையா?
கோல்ட் கால்

குழந்தை கடத்தல் போலீசில் மாட்டுவது என்ற சினிமாதனமான மசாலா, இருப்பது படத்திற்கு ஒரு பின்னடைவு. எப்போதும் தன் தாயைப் பற்றிய நினைத்துக் கொண்டிருப்பவர் சேல்ஸ்மேன் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைப்பவர் எப்படி சடால் என்று காதலில் விழுந்தார் என்று சரியாக விளக்கப்படவில்லை. இது போன்று படத்தில் ஆங்காங்கே சில ஓட்டைகள் இருப்பது திரைக்கதையை பலவீனமாகிறது.

முடிவாக என்ன சொல்லலாம்? 

இந்த படம் இதுவரை அதிகமாக தமிழ் சினிமாவில் பேசாத ஒரு கதைக்களம். இந்த முயற்சியை பாராட்டலாம். இதை ஓரளவு ஆட்டம் செய்து உள்ளார்கள். ஆனால் இன்னும் ஆழமாக சிந்தித்து இருந்தால் நாம் அன்றாட வாழ்க்கையில் இந்த வெயிலிலும் கழுத்தில் டை கட்டிக் கொண்டு வாசல் நிற்கும் சேல்ஸ்மேன் பற்றி சரியான புரிதல் இருந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
தி டார்க் ஹெவன் விமர்சனம்: 7 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் மர்மம்… நிஜமாகவே சைக்கோ கொலையா?
கோல்ட் கால்

இருந்தாலும் இந்த படத்தை நீங்கள் பார்த்தால் சேல்ஸ்மேன் என்பவர்களின் வாழ்க்கை என்பது எது போன்று உள்ளது என்று கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். கோல்ட் கால் திரைக்கதை வலுவாக இருந்திருந்தால் பளபளத்திருக்கும்.

தினசரி நாம் சந்திக்கும் சேல்ஸ்மேன்களின் நிஜப் போராட்டத்தையும், 'கோல்ட் கால்' திரைப்படம் அதை எந்த அளவுக்குப் பிரதிபலித்துள்ளது என்பதையும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com