தி டார்க் ஹெவன் விமர்சனம்: 7 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் மர்மம்… நிஜமாகவே சைக்கோ கொலையா?

1979-ல் கிடைத்த அந்த அமானுஷ்ய புத்தகம் சொல்வது என்ன? சித்து, ரித்விகாவின் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி ரிவ்யூ.
தி டார்க் ஹெவன்
தி டார்க் ஹெவன்
Updated on
ரேட்டிங்(3.5 / 5)

பாலாஜி இயக்கத்தில் சித்து, ரித்விகா நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'தி டார்க் ஹெவன்'. அது 1979 ஆம் ஆண்டு. திருநெல்வேலியில் உள்ள மாவட்ட நூலகருக்கு ஒரு புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகத்தை திறந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற அமானுஷ்ய விஷயங்கள் பற்றிய தகவல்கள் இருக்கிறது. அந்த புத்தகத்தில் தமிழ்நாட்டில் உள்ள மேகரை என்ற மலை கிராமத்தில் நடக்கும் பல்வேறு அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது என்ன என்று படம் சொல்கிறது. 

இப்போது 2007 ஆம் ஆண்டு. மேகரை கிராமத்தில் இன்ஸ்பெக்டராக வருகிறார் சித்து. அந்த ஊரில் இருப்பவர்கள் ஏழு வருடத்திற்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் ஆண்களுக்கு அசம்பாவிதம் நடக்கும் என்கிறார்கள். இதை சித்து நம்ப மறுக்கிறார். ஆனால் ஜூன் மாதத்தில் ஆண்கள் சிலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அதன் பிறகும் சிலர் கொல்லப்படுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஒரு சைக்கோ என்று காவல்துறை முடிவு செய்கிறது. சித்து மனமோ இந்த கொலைக்கெல்லாம் காரணம் சைக்கோ அல்ல, வேறு ஒரு நபர் என்று ஆணித்தரமாக நம்புகிறது. ஒரு கட்டத்தில் சித்து மனைவியும் கொல்லப்படுகிறார். இதனால் மனமுடைந்த சித்து இந்த கேசில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். உயர் அதிகாரி ஆறுதல் சொல்லி மீண்டும் இந்த வழக்கை எடுத்து நடத்த சொல்கிறார். சித்து பல்வேறு தடயங்களை கண்டுபிடிக்கிறார்.

இறுதியில் இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார் என்று சித்து கண்டுபிடிக்கிறாரா என்று கதை சொல்கிறது.

தி டார்க் ஹெவன்
தி டார்க் ஹெவன்

திரைக்கதையில் நேர்த்தி..படம் தொடங்கி சில மணி நேரத்தில் சூடு பிடிக்கும் திரைக்கதை இறுதி வரை அந்த சூட்டில் இருந்து குறையவே இல்லை. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்கிறது பார்வையாளர்களில் பலர் செல்போனை கையிலே எடுக்காமல் திரையில் மட்டுமே கையில் கண்ணை வைத்திருந்ததை பார்க்க முடிந்தது அந்த அளவிற்கு திரைக்கதையில் பல ட்விஸ்ட் மற்றும் வித்தியாசங்கள் இருந்தன. ஒருவரை மையப்படுத்தி இவர் தான் கொலையாளி என்று கதை நகரும் போது அவரே கொல்லப்படும் இடத்தில் திரைக்கதை நிமிர்ந்து நிற்கிறது.

இதையும் படியுங்கள்:
மணிரத்னம் படத்தின் ரகசிய கதை இதுதானா? ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா புதிய படம்!
தி டார்க் ஹெவன்

ஒளிப்பதிவு எடிட்டிங் சபாஷ்..படத்தில் தேவை இருக்கிறதோ இல்லையோ ஒரு டார்க் லைட்டை வைத்து இது வித்தியாசமான ஒளிப்பதிவு என்று காட்ட முயற்சிப்பார்கள் சில ஒளிப்பதிவாளர்கள். இந்த டார்க் ஹெவன் படத்திலும் பல இடங்களில் இரவு நேரத்தில் தான் எடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கேயும் டார்க்கான லைட்டிங் தான் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன்வைத்திருக்கிறார். ஆனால் இந்த லைட்டிங் ஒருவித பயமுறுத்துதலையும் ஒரு ஹாரர் உணர்வையும் நமக்குள் வர வைக்கிறது.இந்த விதத்தில் இவருக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒளிப்பதிவுக்கு அடுத்தபடியாக நாம் சபாஷ் போட வேண்டியது ஆறுமுகத்தின் எடிட்டிங். நேர்த்தியாக சரியாக எடிட்டிங் செய்துள்ளார்.

இசை சூப்பர்..சக்தி பாலாஜியின் இசையில் காட்சிகள் ஒருவித திரில்லரையும் ஹாரர் உணர்வையும் சேர்த்து தந்திருக்கிறது. பல இடங்களில் மிக மெல்லிதாக இசைக்கருவிகளை மீட்டியிருப்பது பாராட்டும் படியாக உள்ளது.

நடிப்பு பலே ..ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். மிக நன்றாக அதிக அலட்டாமல் முகத்தில் ஒரு இருக்க தன்மையை வைத்துக்கொண்டு ஒரு சரியான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் சித்து. இதற்கு அடுத்தபடியாக நன்றாக நடித்து இருப்பது ரித்விகா. இவருக்கு இது ஒரு நல்ல கேரக்டர். ரித்விக்கா கேரக்டரை இங்கே நாம் வெளிப்படுத்தினால் படத்தில் சஸ்பென்ஸ் குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
தனியொரு ஆளாக படம் எடுப்பது சாத்தியமா? சங்ககிரி ராஜ்குமாரின் 'ஒன்' படம் தரும் சினிமா பாடம்!
தி டார்க் ஹெவன்

ஒரே ஒரு குறை..படத்தில் பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் ஒரே ஒரு மைனஸ் விசயம் உள்ளது. அது என்ன என்றால், படத்தில் மேகரை கிராமத்தில் இருக்கும் மக்கள் என்று பலரை காட்டுகிறார்கள். அவர்களின் பெயர்கள் நம் மனதிற்குள் நிற்பதற்கு முன்பே அந்த காட்சிகள் வேகமாக கடந்து விட்டது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் சிறிது டீடைலிங் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

மொத்தத்தில்....தமிழ் சினிமாவில் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் கண்டிப்பாக ஒரு இடம் இருக்கிறது. நீங்கள் இப்படத்தைப் பார்த்தால் மலையாளத்தில் வந்து கொண்டிருக்கும் பல சஸ்பென்ஸ் த்ரில்லர் இணையான ஒரு தமிழ் திரில்லர் படத்தை பார்த்து அனுபவம் உங்களுக்கு கிடைக்கலாம்.

1979-ல் கண்டெடுக்கப்பட்ட ஒரு அமானுஷ்ய புத்தகத்திற்கும், மேகரை கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கொடூர மரணங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை கிளைமாக்ஸ் வரை இருக்கை நுனியில் உட்கார வைக்கும் ஒரு சிறந்த தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தை இக்கட்டுரை தருகிறது.

logo
Kalki Online
kalkionline.com