சத்தமின்றி முடிந்த 'குக் வித் கோமாளி' அஸ்வின் திருமணம்: வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

பெற்றோர் ஆசியுடன் சென்னையில் எளிமையாக நடைபெற்ற அஸ்வின் - புவனேஸ்வரி திருமண விழா.
Aswin bhuvaneswari
aswin marriageAswin
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

விஜய் டிவியில் விஜேவாக இருந்தவர் அஸ்வின் , இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்று(நவ. 20) அவரது திருமணம் சென்னையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுள்ளது. அவர் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவரது திருமண வாழ்விற்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அஸ்வின் , பிரபலமான 'குக் வித் கோமாளி' என்கிற நகைச்சுவை கலந்த சமையல் போட்டியில் தொகுப்பாளராக பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்ததால் , அவருக்கு குக் வித் கோமாளி அஸ்வின் என்ற பெயரும் வந்தது. பின்னர் ஒரு சில திரைப்படங்களில் அவர் துணை நடிகராக நடித்து வந்தார். சின்னத்திரை பிரபலம் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பையும் வெள்ளித்திரையில் வாங்கித் தந்தது.

அவர் முதன்முதலாக 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவருக்கு பெயரை பெற்று கொடுத்தது , பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'செம்பி' திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த திரைப்படம் கொடுத்த வெற்றியின் மூலம் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது திருமண குறித்து செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இருந்தார். திடீரென்று வெளியான அவரது இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த அறிவிப்பில் ,

" என் மீது அன்பு கொண்ட மக்களுக்கும் , பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும், நல்வாழ்த்து தெரிவிப்போருக்கும், ​மிக்க மகிழ்ச்சியோடும் நன்றியுணர்வோடும் எனது திருமணச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பெற்றோர் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதங்களுடன், அஸ்வின் குமாரும் - புவனேஸ்வரியும் சமீபத்தில் நடைபெற்ற எங்கள் குடும்ப விழாவில் திருமணம் செய்து கொண்டோம்.

aswin
aswinaswin instagram

நாங்கள் இருவரும் எங்கள் வாழ்வின் இந்தப் புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்கும்போது, இந்த அமைதியான குடும்ப நிகழ்வை நாங்கள் கொண்டாடியதற்குத் தொடர்ந்து அன்பும், ஆதரவும், புரிதலும் அளித்த ஊடகங்கள், எங்கள் சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ​நாங்கள் இந்தப் பயணத்தை ஒன்றாகத் தொடங்கும் வேளையில், உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துகளையும் நாடுகிறோம். " என்று அஸ்வின் தெரிவித்திருந்தார்".

அஸ்வினின் திருமணத்தில் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் , மணமகள் சார்பில் உள்ளவர்கள், உள்ளிட்ட மிகவும் முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணம் பெரியவர்களின் ஆசியுடன் பாரம்பரிய முறைப்படி சிறப்புடன் நடைபெற்றுள்ளது என்பதை அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வினின் மனைவியான புவனேஸ்வரியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவரது தாத்தா ராஜசேகர் 80- களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற இயக்குனராக இருந்தவர். அவர் ரஜினிகாந்த் மற்றும் கமலை கதாநாயகனாக வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். தம்பிக்கு எந்த ஊரு , படிக்காதவன், மாப்பிள்ளை , காக்கி சட்டை, விக்ரம் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.