"வாழ்வில் வந்ததற்கு நன்றி" காதலை உறுதி செய்த அம்மு அபிராமி... யார் தெரியுமா?

Ammu Abhirami
Ammu Abhirami

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பிரபல நடிகையும், குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான அம்மு அபிராமி தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

விஜய் நடித்த பைரவா உட்பட சில படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்த நடிகை அம்மு அபிராமிவுக்கு திருப்புமுனையாக அமைந்தது ராட்சசன் படம் தான். இதையடுத்து, அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று பட்டி தொட்டி எல்லாம் பேமஸானார். இதையடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர்தான் குக்வித் கோமாளியில் 2வது ரன்னர் அப் இடத்தை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும், பிஸியாக நடிகையாக நடித்து வரும் அம்மு அபிராமி சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், பல படங்களில் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட், கண்ணகி போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
அனிருத் செய்யப்போகும் சம்பவம்... வைப் செய்யும் ரசிகர்கள்!
Ammu Abhirami

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்த பார்த்திபனுக்கும் அம்மு அபிராமிக்கும் காதல் என்று கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது பார்த்திபனின் பிறந்தநாளில் அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பதிவு செய்து பிறந்த நாள் வாழ்த்துக்களை அம்மு அபிராமி தெரிவித்துள்ளார். மேலும், அதில், பிறந்ததற்கு நன்றி.. வாழ்வில் வந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு காதலை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் இதுவரை ரகசியமாக இருந்த காதலை, அம்மு அபிராமி வெளிப்படையாக தெரியப்படுத்தியுள்ளார். மணியுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் அம்மு அபிராமி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அம்மு அபிராமிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மிகவும் ஹோம்லியாக இருக்கும் அம்மு அபிராமியின் திருமண அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com