அனிருத் செய்யப்போகும் சம்பவம்... வைப் செய்யும் ரசிகர்கள்!

Anirudh Ravichander
Anirudh Ravichander

இசையமைப்பாளர் அனிருத் கொடுத்துள்ள அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தென்னிந்தியாவின் ராக்ஸ்டார் அனிருத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரது இசையில் அஜித், விஜய், சூர்யா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசைக்கட்டி வருகின்றது. தெலுங்கிலும் நானி, என்டிஆர் உள்ளிட்ட இளம் நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அனிருத். இந்நிலையில், அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் பிரம்மாண்டமாக நடத்தி வரும் அனிருத் அதுகுறித்த அறிவிப்பை வித்தியாசமாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன.

பாலிவுட்டில் ஜவான் படத்தில் இசையமைத்த பிறகு, இந்தி ரசிகர்களை கவர்ந்த அனிருத், தற்போது ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவர்கொண்டா ஆகியோரின் அடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ரஜினியின் வேட்டையன், கூலி, கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் அடுத்ததாக சிவகார்த்திகேயன், பிரதீப், கவீன் உள்ளிட்டவர்களின் அடுத்த படங்களுக்கும் இசையமைக்க உள்ளார் அனிருத்.

இதையும் படியுங்கள்:
திருமணம் செய்ய பிரபாஸுக்கு சோம்பேரி – ராஜமௌலி ஓபன் டாக்!
Anirudh Ravichander

இந்த நிலையில் அனிருத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தென்னிந்தியாவையே கலக்கப்போகும் Collab லோடிங்.. ” என ட்வீட் செய்துள்ளார். இது குறித்த தகவல்களை இன்று வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது அவர் இசையமைத்து வரும் படம் தொடர்பான அப்டேட்டா? இல்லை புதிய படம் குறித்த அறிவிப்பா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். சிறிய சிறிய படங்களில் எண்ட்ரி கொடுத்த அனிருத் இசைக்கு இன்று பட்டிதொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com