
பொதுவாக ஒவ்வொருவர் வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டைகள் நடப்பது உண்டு. மாமியார் மருமகள் சண்டையில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ ஆண்கள்தான். ஆதரவை யாருக்கு வழங்குவது என்பதும், வழங்கினால் மறுபுறம் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதும்தான் சவால். பல பெரிய குடும்பங்களில் கூட மாமியார் மருமகள் இடையில் ஒற்றுமை இருக்காது. ஆயினும் ஒரு நடிகை தனது மாமியார் மீது அதிக அன்போடு இருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?
மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு சிறந்த உதாரணமாக நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் அவரது மாமியார் வீணா கவுசல் உள்ளனர். இந்த மாமியார்- மருமகள் ஜோடி மீது பல பாலிவுட் நடிகைகளின் கண்பட்டு உள்ளது. பாலிவுட் நடிகைகளின் மாமியாரும் பெரும்பாலும் முன்னாள் நடிகைகளாக உள்ளனர். ஆனாலும் அவர்களுக்குள் ஒத்து வருவதில்லை. கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஜோடி தற்போது பாலிவுட்டில் அதிகம் பேசப்படும் ஜோடி. இந்த இருவரின் ஜோடியை ரசிகர்களும் மிகவும் விரும்புகின்றனர்.
கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷலைப் போலவே, கத்ரீனா மற்றும் மாமியார் வீணா ஜோடியும் பிரபலம். கவுஷலின் அம்மாவுக்கும் கத்ரீனாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இருவருக்கும் வலுவான பிணைப்பு உள்ளது. விக்கியின் தாய் தனது மருமகளை நேசிக்கிறார். கத்ரீனா நேரம் கிடைக்கும் போதெல்லாம், தனது மாமியாருடன் நிறைய நேரம் செலவிடுகிறார். இருவரும் சில நாட்களுக்கு முன் ஷீரடி கோவிலுக்கு சென்றுள்ளனர். தங்களது அன்பை பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கத்ரீனா கைஃப் பல பேட்டிகளின் போது, தனது மாமியார், உணவு மற்றும் பிற விஷயங்களில் தன் மீது எவ்வளவு அக்கறையோடு உள்ளார் என்பதை கூறியுள்ளார். மிகவும் முக்கியமாக கத்ரீனாவின் கூந்தலையும் மாமியார் தான் சிறப்பு கவனம் கொடுத்து நேர்த்தியாக வளர்த்து வருகிறார். கத்ரீனாவின் தலை முடிக்காக அவரது மாமியார் பிரத்யேகமான மூலிகை எண்ணெய் கூட தயாரித்து தருகிறாராம்.
தினசரி கத்ரீனாவின் மாமியார் அவரது தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விடுகிறாராம். இதை பல நேர்காணலில் கத்ரீனா தெரிவித்து உள்ளார். கத்ரீனாவின் சரும பராமரிப்பு, கேசம் என அனைத்திலும் மாமியார் அதிக அக்கறை காட்டுகிறார். வீணா கவுசல் வெங்காயம், நெல்லிக்காய், வெண்ணெய் மேலும் சில மூலிகை பொருட்களையும் சேர்த்து கேசத்திற்கான மூலிகை எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கிறார். வீணா கவுசல் மருமகளின் ஊட்டச்சத்து விஷயங்களிலும் அக்கறை காட்டுகிறார். வீட்டு வைத்தியத்திலும் அவர் தேர்ச்சி பெற்றவராக உள்ளார். மாமியாரின் கவனிப்பில்தான் கத்ரீனாவின் சருமமும் கேசமும் மிளிர்வதாக தெரிவித்துள்ளார்.
கத்ரீனாவை அவரது மாமியார், 'கிட்டோ' என்றுதான் செல்லமாக அழைக்கிறாராம். கத்ரீனா எப்போதும் தன் மாமியாரையும் கணவர் விக்கி கவுசலையும் புகழ்ந்து கொண்டே இருப்பார். கத்ரீனா அடிக்கடி தனது மாமியாருடன் அன்பாக இருக்கும் தருணங்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார். மாமியாருடன் மனஸ்தாபம் கொண்ட பாலிவுட் நடிகைகள் கத்ரீனாவை பொறாமையுடன் பார்க்கிறார்களாம்!