அன்பான வாடகைத் தாய்!

மும்பை பரபர
அன்பான வாடகைத் தாய்!
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

லக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் நடிகையானவர். பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த அவர் ஹாலிவுட்ற்கும் சென்று பிரபலமாகிவிட்டார். அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோன்ஸ் எனப் பெயர் வைத்தார்.

இவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை சமூக வலைத்தளங்கள் கிண்டலும், கேலியும் செய்ததைக் கண்டுகொள்ளவே இல்லை.

தற்சமயம் வாடகைத் தாய் குறித்த விபரத்தைத் தெரிவிக்க, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் கூறியதாவது:

“எனது சில உடல் நலப் பிரச்னைகளால் தாயாக முடியவில்லை. அதனால் வாடகைத் தாயை நாடி குழந்தை பெறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. குழந்தை பெரும் பாக்கியம் செய்துள்ளது. மிகவும் அன்பான வாடகைத் தாய், எங்கள் குழந்தையை 6 மாத காலம் பாதுகாத்து வளர்த்தார்.

என்னைப் பற்றியும், என் உடல் நலம் பற்றியும் வெளியார் அறியார். நானும் எதுவும் தெரிவிக்காததால், பொதுமக்கள் எவ்வாறு வேண்டுமானாலும் பேசுவது சரி கிடையாது.”

குறை மாதத்தில் குழந்தை பிறந்தது முதலேயே, மருத்துவமனையே கதியாகக் கிடந்த பிரியங்காவை, அவரின் தங்கை நடிகையான பரினீத்தி சோப்ரா பாராட்டியிருக்கிறார்.

அவரவர் வாழ்க்கை அவருடையது. அடுத்தவரைப் பற்றித் தெரியாமல் சர்ச்சை செய்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

logo
Kalki Online
kalkionline.com