அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 விடுமுறை அல்லாத நாட்களிலும் பாக்ஸ் ஆபிஸில் அதன் நட்சத்திர எண்ணிக்கையுடன் தொடர்ந்து அலைகளை உருவாக்கி வருகிறது. மேலும் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், இப்படத்தின் வியாபாரம் மேலும் அதிகரிக்கும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புதிய படங்களில் திரையிடப்பட்ட போதிலும், புஷ்பா 2 பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறது. மேலும் வணிகம் மற்றும் சர்ச்சரையான வெளியீடுகளால் 'பாதிக்கப்படாமல்' உள்ளது என்று வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் கூறியுள்ளார்.
வெளியான மூன்றாவது திங்கட்கிழமை, புஷ்பா 2 அனைத்து மொழிகளிலும் ரூ. 12.25 கோடி வசூலித்துள்ளது. மொத்த வசூல் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1062.6 கோடியாக உள்ளது. இந்தியில் மட்டும் இப்படம் ரூ.689.4 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
புஷ்பா 2 ரிலீஸ் ஆன முதல் நாளே உலகளவில் ரூ.294 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது புஷ்பா 2.
வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் புஷ்பா 2 ஒரு "தடுக்க முடியாத" சக்தியாக உள்ளதாக பாராட்டி உள்ளார். மேலும் அவர், "புஷ்பா 2 , 3-வது வார இறுதியில் ரூ.50 கோடியைத் தாண்டியது, இது முற்றிலும் அற்புதம்" என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தொடர்ந்து இந்த படம் மூன்றாவது வார இறுதியில் திரைப்பட பார்வையாளர்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளதாகவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் நிச்சயம் கூடுதல் வசூலாகும் என்றும் கூறியுள்ளார்.
புஷ்பா 2 - திரைப்படத்தை சுகுமார் எழுதி இயக்கி உள்ளார். இதனை சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, தனுஞ்சய், ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ், அஜய் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன புஷ்பா படத்தில் அசத்தலான வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியிடப்பட்டது.
சிறப்பு காட்சியின் போது பெண் மரணம், அல்லு அர்ஜுன் கைது, சிறை வாசம், ஆந்திர முதல்வர் குற்றச்சாட்டு, மற்றும் பல்வேறு விமர்சனங்களை தவிடு பொடியாக்கி புஷ்பா 2 வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை காண ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எந்த சர்ச்சைகளும் இப்படத்தில் வெற்றியை தடுக்கவில்லை என்றும் அதிகரித்தே உள்ளது என்பதற்கு வசூலின் சாதனையே உதாரணமாகும்.
மேலும் முந்திய படங்களின் சாதனைகளை தவிடுபொடியாக்கி புஷ்பா 2 வரலாற்கு சாதனை படைத்து முதல் இடத்தில் சிம்மாசனம் போட்டு அமரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்த நிலையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் இன்று சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.