காஷ்மீரில் நடந்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ வெளியீடு படக் குழுவினரால் செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தீவிரமாக நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்பில் அண்மையில் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து தற்போது படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காஷ்மீர் படப்பிடிப்பை முடிந்த கையுடன் இன்று ‘லியோ’ படக்குழு சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 10 - 15 நாட்கள் சென்னையில் நடக்கும் எனவும், அதைத் தொடர்ந்து படக்குழு ஹைதராபாத் சென்று அங்கு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மே மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படக்குழுவினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுப்பட்டுள்ளது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்களுக்கு படக்காட்சிகளை விளக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து படக்குழுவினர் பேசுவது, நடிகர் விஜய் ஓடிவருவது போன்ற காட்சிகள் மற்றம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை காவல் படையினருடன் நடிகர் விஜய் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியானதில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.