'மாரி 3' படத்தின் மிரட்டலான அப்டேட்! படத்தின் ஒன்லைன் இதுவா.?

மாரி 3 ஒன்லைன் கதையை லாக் செய்து பணிகளை முடுக்கிவிட்ட நடிகர் தனுஷ்.
மாரி 3 திரைப்படம்
Maari 3
Updated on

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ், தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து மாரி - 3 படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான மாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோ என்றாலே நல்லவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற கோணத்தை மாற்றி இந்தப் படத்தில் ஜாலியான ரௌடியாக நடித்து அசத்தியிருந்தார் தனுஷ்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி - 2 படத்திலும் தனுஷ் நடித்தார். இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகன் தான் இயக்கினார். இந்நிலையில் மாரி படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க நடிகர் தனுஷ் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்படி படத்தின் ஒன்லைனை இயக்குநர் பாலாஜி மோகனிடம் தனுஷ் சொல்லி விட்டார். மேலும் ஒன்லைனை வைத்தே கதையை டெவலப் செய்யுங்கள் என்றும் இயக்குநரிடம் தெரிவித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

இதையும் படியுங்கள்:
செஃப் ஆக ஆசைப்பட்ட தனுஷ்: நடிகரானது இப்படித் தானா!
மாரி 3 திரைப்படம்

மாரி திரைப்படத்தின் 2 பாகங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 3-வது பாகம் உருவாக்கப்பட உள்ளது. மாரி திரைப்படத்தின் முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘டானு டானு’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவியுடன் தனுஷ் நடனமாடிய ‘ரௌடி பேபி’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. 2-ம் பாகத்தில் கதாநாயகி இறந்து விடுவார். மாரிக்கு காளி என்ற ஒரு மகன் இருப்பார்.

காளி தடகளப் போட்டியில் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனால் மாரி திரைப்டத்தின் 3-ம் பாகத்தில் தனுஷ் காளி கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் தந்தை, மகன் என இரட்டை வேடத்திலும் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளது. படத்தின் ஒன்லைன் தெரிந்த பிறகே, தனுஷின் ரோல் குறித்து தெரிய வரும்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப் போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்தது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வேலைகளில் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தனுஷ். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ், இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார். சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மாரி திரைப்படம்
Maari 3
இதையும் படியுங்கள்:
'சிக்ஸ் பேக்' சென்சேஷன் now trending ... சூர்யா? தனுஷ்? விஷால்? விக்ரம்?
மாரி 3 திரைப்படம்

வேலையில்லா பட்டதாரி படத்திற்குப் பிறகு, நடிகர் தனுஷுக்கு பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுத் தந்தது மாரி படம் தான். அதோடு மாரி படத்தின் கெட்டப்பும் தனுஷுக்கு பிடித்துப் போனதால், 2-ம் பாகத்தில் நடித்தார். இப்போது 3-ம் பாகத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதால், தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்த வருடம் திரையில் மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஓம் படத்தின் முதல் பாகம், பான் இந்தியப் படமாக ரிலீஸாக இருக்கிறது. வரலாற்றை மையப்டுத்திய படம் என்பதால், ஓம் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com