நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடும் தனுஷ்!

Dhanush new update
Dhanush new update
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

நடிகர் தனுஷ் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் அப்டேட், அவர் இயக்கவிருக்கும் படத்தின் அப்டேட், நடித்து முடித்தப் படத்தின் அப்டேட் என ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் சிறந்த நடிகராக வலம் வருவதையடுத்து அவருடைய திறமை பாலிவுட்டிற்கும் ஹாலிவுட்டிற்கும் அவரை அழைத்துச் சென்றது. பாடல் பாடுவது, வரிகள் எழுதுவது, படம் இயக்குவது, தயாரிப்பது என சினிமாவில் அனைத்து துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார், நடிகர் தனுஷ்.

தனுஷின் அடுத்தப் படமான கேப்டன் மில்லர் அடுத்த ஆண்டு பொங்களுக்கு வெளியாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். அதேபோல் சத்ய ஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் 2 சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பாக கேப்டன் மில்லர் படக்குழு 34 வினாடிகள் கொண்ட 'உன் ஒழியிலே' என்ற வரிக்கொண்ட அறிவிப்பை வெளியிட்டது.

அதேபோல் தனுஷ் தயாரித்து , இயக்கும் மூன்றாவது படத்தின் அப்டேட் வெளியானது. பெயரிடப்படாத இந்த படத்திற்கு போஸ்டரில் DD3 என்று குறிப்பிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல் துவங்கியது என சினிமா வட்டாரத்தினார் பேசிக்கொண்டார்கள். இது ஒரு காதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக தனுஷின் சகோதரி மகன் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், சரத் குமார் , மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக செய்தி வந்துள்ளது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் முக்கிய அப்டேட் டிசம்பர் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஊமைப் படம் முதல் உலகப்படம் வரை...! தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி!
Dhanush new update

இதற்கு முன்னர் தனுஷ் பா.பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து சன் பிக்சர் தயாரிப்பில் தனுஷே நடித்து இயக்கும் அவரது 50வது படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15ம் தேதிதான் முடிந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், தனுஷ் இயக்கும் 3வது படத்தையும், மாரி செல்வராஜின் ஒரு படத்தையும் மற்றும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com