செம்மரக்கடத்தல் உண்மை சம்பவமா? தனுஷின் 'ஓம்' ட்ரெய்லர் உடைக்கும் அதிரடி ரகசியங்கள்!

ஆந்திரா காட்டுக்குள் நடக்கும் உதிரம் தெறிக்கும் ஆக்ஷன் வேட்டையில் தனுஷ் - இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் மாஸ் கூட்டணி!
ஓம் படம்|hero of the movie was surrounded by police
ஓம் படம்AI image
Updated on

னுஷ் நடிப்பில் லேட்டஸ்ட்டாக வந்த கர, இட்லிக்கடை இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளிவரும் 55 வது படமாக 'ஓம்' என்ற படம்  வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது முந்தைய இரு படங்களை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள்.

இவர் எப்போதும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் படம் இயக்குபவர். ரங்கூன் (2017) பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் நல்ல படம் என்று விமர்சகர்களால் பாராட்டுப் பெற்றது. இவரது இரண்டாவது படமான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'அமரன்' மெகா ஹிட் ஆனது.

உண்மையான ராணுவ வீரன் கதையைத் தான் படமாக எடுத்தார். ரசிகர்கள் படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால் இயக்குனர் மேல் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. படத்தில் அந்த ராணுவ வீரர் ஒரு பிராமணர் என்ற உண்மையை மறைத்து விட்டார் என்றார்கள். 'சாதியை அடையாளப்படுத்த மாட்டேன்' என்று இயக்குநர் சமாளித்தார்.

2015 ஆந்திரா உண்மை சம்பவத்தை மையப்படுத்துகிறதா தனுஷின் 'ஓம்' படம்?

இப்போது 'ஓம்' படத்தின் ட்ரெய்லர் கட் வெளியாகி உள்ளது. அதைப் பார்க்கும்போது 2015ல், ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகள் வெட்டச்சென்ற 20 தமிழர்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை அமைந்திருப்பது போல் தோன்றுகிறது. அந்த சம்பவத்துக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. கொல்லப்பட்ட 20 தமிழர்களும் குற்றவாளிகள்தானா? இல்லை ஜோடிக்கப்பட்ட வழக்கா?என்பதும் நிரூபிக்கப்படவில்லை.

ட்ரெய்லர் கட்டில் ஒரு போலீஸ் ஜீப் காட்டப்படுகிறது. அதில் வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் ஏபி என்று இருக்கிறது. இதிலிருந்து ஆந்திரப்பிரதேசத்தில் நடக்கும் சம்பவம் என யூகிக்க முடிகிறது. செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 20 தமிழர்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சுடுவதற்கு முயலும்போது ஹீரோ எண்ட்ரி. தடுத்து விடுவது போல் காட்சி.

இந்த ட்ரெய்லரிலிருந்து 2015 ல் நடந்த அந்த சம்பவத்தை வைத்துத்தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என யூகிக்க முடிகிறது. இட்லிக்கடை அப்பா பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கிராமத்து மெலோ டிராமா. கர படமும் கிராமத்தில் நடக்கும் ஒரு ஹெய்ஸ்ட் திரில்லர். இரண்டு படங்களும் ஹிட் ஆகாததால், தனுஷ் ஆக்சன் திரில்லர் ஜர்னரில் நடித்தால் பாதுகாப்பு என்று நினைத்திருக்கலாம்.

இரண்டு பாகங்களாக வெளியாகும் தனுஷின் 'ஓம்' படம் சாதிக்குமா?

இந்தப்படம்  இரண்டு பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் தான் இப்போது வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வந்த புதுப்பேட்டை படம் கூட இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார்கள். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை இரண்டாம் பாகம் வர இருக்கிறது. கேப்டன் மில்லர் படம் கூட இரண்டாம் பாகத்துக்கு லீடு விட்டிருந்தார்கள். அப்படிப் பார்த்தால் தனுஷ் நடிக்கும்  இரு பாகங்கள் கொண்ட பட பட்டியலில் 'ஓம்' நான்காவது படம்.

இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வேலையில்லாப் பட்டதாரி பாகம் 1 பாகம் 2 என வந்தது. இரண்டும் ஹிட். அதே போல் மாரி 1, மாரி 2 இரண்டும் ஹிட். இதனால் தான் தனுஷ் பாகம் 2 வருவது போல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஓம் படம்|actor dhanush and mammootty in movie
ஓம் படம்AI image

இது பான் இண்டியா படமாக உருவாகிறது. மெகா ஸ்டார் மம்முட்டி போலீஸ் ஆபீசராக இருக்கலாம். கதை நடப்பது ஆந்திராவில். தமிழர்களைக் காப்பாற்றும் நாயகனாக தனுஷ் நடிப்பதால் தனுஷ்சைப் பிடிக்க வரும் போலீஸ் ஆபீசராக அல்லது பாரஸ்ட் ஆபீசராக மம்முட்டி இருக்கலாம். நாயகிகளாக இருவர் நடிக்கிறார்கள். சாய் பல்லவி, ஸ்ரீ லீலா.

இதையும் படியுங்கள்:
Disclosure Day விமர்சனம்: ஏலியன் ரகசியங்களை உடைத்தாரா ஸ்பீல்பெர்க்?
ஓம் படம்|hero of the movie was surrounded by police

ஏற்கனவே சாய்பல்லவி தனுஷ் உடன் நடித்த  மாரி 2 படத்தில் ரவுடி பேபி சாங் அதிரிபுதிரி ஹிட் அடித்ததும் அதில் சாய் பல்லவியின் டான்ஸ் ஸ்டெப்ஸ் அட்டகாசமாய் இருந்ததும் தெரிந்த விஷயம். அதனால் இந்தப் படத்திலும் ஒரு கலக்கல் டான்ஸ் இருக்கலாம். இசை சாய் அபயங்கர் என்பதால் ஜென்ஸ் சி கிட்ஸூக்கு மிகவும் பிடித்த படமாக உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான Wunderbar Films மற்றும் R Take Studios இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், தனுஷின் திரைப்பயணத்திலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றாகும்.

"ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் தனுஷின் 'மாஸ் விண்டேஜ்' (Mass Vintage) ஆக்சன் அவதாரத்தை இந்தப் படம் மீண்டும் கொண்டு வரும்" என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. டீசரிலேயே தனுஷ் எழுதிய லிரிக்ஸ் (Lyrics) இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் அதிகாரப்பூர்வ முழு தலைப்பு 'Om - Chapter 1: Udhiram - The Blood Wood' என்பதாகும். செம்மரக்கடத்தல் மற்றும் காடுகளின் பின்னணியை இந்த 'உதிரம்' (The Blood Wood) என்ற டேக்லைன் மிகச்சரியாகக் காட்டுகிறது. இந்தப் படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இதையும் படியுங்கள்:
தியேட்டர் திருவிழா! இந்த வாரம் ரிலீஸாகும் 8 படங்கள்...!!
ஓம் படம்|hero of the movie was surrounded by police

தனுஷின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் 'ஓம்' திரைப்படத்தின் பின்னணியில் இருக்கும் நிஜக்கதை, கதாபாத்திரங்களின் தேர்வு மற்றும் படத்தின் அரசியல் தாக்கங்களை துல்லியமாக முன்கூட்டியே கணித்து, சினிமா வட்டாரத்தின் ஹாட் டாபிக்கை உடனுக்குடன் விவாதிக்கும் தெளிவைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com