

சினிமா பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இந்த வாரம் 6 தமிழ்ப்படங்கள், ஒரு தெலுங்கு டப்பிங் தமிழ் மற்றும் ஒரு ஹாலிவுட் தமிழ் டப்பிங் படம் என ஆக மொத்தம் 8 படங்கள் வெளியாகின்றன.
தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியல்:
அனந்தன் காடு
கான்சிட்டி
அங்கீகாரம்
அந்தரன்
ஹார்ட்டின் (Heart in)
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
ஹனுமான் (Hanuman)
சூப்பர் கேர்ள் (Super Girl)
1. அனந்தன் காடு - க்ரைம் ஆக்சன் திரில்லர் :
ஆர்யா நாயகனாக நடிக்கும் இந்தப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவான படமாகும். 'அனந்தன் காடு' என்பது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் என்ற நகரத்தை குறிக்கும்; இது கேரளாவின் தலைநகரமாகும்.
இப்படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இவர் 'காலேஜ் டேஸ்' (2010) என்ற க்ரைம் த்ரில்லர் மூவி, 'காஞ்சி' (2013), 'தியான்' (2017) ஆகிய 3 மலையாள படங்களையும், 'ரன் பேபி ரன்' (2023) என்ற தமிழ் படத்தையும் இயக்கியவர் ஆவார்.
இதில் ஆர்யா, நிவ்யா விமல், ரெஜினா கசண்ட்ரா, இந்திரன்ஸ், சுனில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இது ஒரு பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் மூவி ஆகும். இதன் ட்ரெய்லரைப் பார்த்தால் விஜய் சேதுபதி, சூரி நடித்த 'விடுதலை' படம் போல் இருக்கிறது. முரளி கோபி திரைக்கதை எழுத உருவாகி இருக்கும் இப்படத்தின் ரன்னிங் டைம் 157 நிமிடங்கள்.
ரசித்த வசனங்கள்:
"ஒரு காலத்தில் அனந்தபுரி கொடூரமான காடாக இருந்தது."
"புல்லை மேயும் புள்ளிமானுக்கு புலியை பார்த்தா பயம். ஆனா, புலிக்கு எது பயம் தெரியுமா?"
"தெரியாம மிதிச்சுட்டாக்கூட சீறிப்பாய்ந்து கொத்த வரும் பாம்பைப் பார்த்தா புலிக்கு பயம்."
"யார் நீ? உண்மையைச் சொல்.தாயை இழந்தவன், தந்தையை இழந்தவன். இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்; தமிழன்."
"ரத்தத்தில் ஆரம்பித்த கதையை, ரத்தத்தாலேயே தான் முடிக்கணும்."
அர்ஜுன் தாஸ், அன்னா பென் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்தக் காமெடி படத்தை இயக்குபவர் ஹரீஷ் துரைராஜ். இசை: ஷான் ரோனால்டன். ட்ரெய்லரை பார்க்கும்போது யோகி பாபு மட்டுமில்லாமல், எல்லோருமே காமெடி செய்கிறார்கள் போல் தோன்றுகிறது.
'லக்கி பாஸ்கர்', 'சதுரங்க வேட்டை' போல ஏதோ ஸ்கேம் பண்ணிச் சம்பாதிக்கும் கதை மாதிரி தெரிகிறது. விடிவி கணேஷின் காமெடி அல்ட்டிமேட் ரகம்.
ரசித்த வசனங்கள்:
"என்னது குயிக் மணியா? இல்லை, ருக்மணி... இல்லை பத்மினி."
"ஐடியா நல்லாருக்கு, யாரு டைரக்டர்? "இவன்தான்."ஹீரோ?" "அதுவும் இவன்தான். பாட்டுக்கூட எழுதுவாரு."
"கரண்ட் இல்லை, அப்புறமா வா."இது இ.பி ஆபீஸ் தானே?" "அது மட்டும் என்ன கரண்ட்லயா ஓடுது?"
இயக்குநர் பா. ரஞ்சித்திடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த ஜெ.பி. தென் பாதியான், அறிமுக இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.
'அறம்', 'அயலான்' படங்களின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் நாயகனாக அறிமுகமாகிறார். சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கிறார்கள். தடகள வீரர்கள் வாழ்வில் நடக்கும் சவால்களை பற்றிய கதை இதுவாகும்.
ரசித்த வசனங்கள்:
"நம்ம நாட்டுக்கு நேஷனல் கேம்னு ஒண்ணு இல்லவே இல்லை."
"திறமை இருந்தா மட்டும் ஜெயிச்சுட முடியாது."
"ஏழைகள் வாழ்வதே பிடிக்காத இந்த நாட்டில், கோர்ட் ஏறி கேள்வி கேட்டா சும்மா விட்ருவாங்களா?"
"ஸ்போர்ட்ஸ்னா வெறும் கிரிக்கெட்தான்னு நினைக்கறாங்க."
"எனக்கு இருக்கற ஆசை, உன் தலைமுறைலயே உன் வாழ்க்கை மாறிடனும்."
'அந்தரன்' என்றால் வேடன் என்று பொருள். ஏற்கனவே சரத்குமார் நடித்து 'வேடன்' படம் வந்துவிட்டதால், 'அந்தரன்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால், பிரசாந்த் நடித்த 'அந்தகன்' டைட்டிலுடன் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.
சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜின், இவானா, வருண், அனுபமா குமார் நடித்திருக்கும் படம் இது. ஒரு இளம் பெண்ணைச் சுற்றி நடக்கும் மர்ம நிகழ்வினையும், ஒரு வழக்கின் பின்னணியையும் அலசும் கதை இது.
ரசித்த வசனங்கள்:
"யார்றா நீ? ரொமான்ஸை் கிரைமா மாத்திட்டு இருக்கே?"
"என்னோட முதல் காதல் நீதான்; உன்னோட கடைசி காதல் நான் தான்."
சனந்த் ரெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்க, கிஷோர் குமார் இயக்கியிருக்கும் படம் இது. "காதலில் செகண்ட் சான்ஸ் வந்தால்?" என்பதுதான் இதன் ஒன்-லைன்.
ரசித்த வசனங்கள்:
"எவ்வளவு செல்ஃபிஷா காதலிக்க முடியும் என்பதை, உன்னைப் பார்த்துத்தான் கத்துக்கிட்டேன்."
"உங்க லவ் உண்மையான லவ்வா இருந்தா, நீங்க ரெண்டு பேரும் எங்கே போனாலும் அந்த லவ்வே உங்களைச் சேர்த்து வெச்சிடும்."
1944-ல் தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு இதுவாகும். சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் ஒரு பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். 'இந்து நேசன்' பத்திரிகையில் அவதூறாகக் கிசுகிசு எழுதிய லட்சுமிகாந்தனை, இவர்கள் இருவரும் கூலிப்படை வைத்துக் கொலை செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
'கொன்றால் பாவம்' படத்தின் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர் வெற்றி, பிரிகிடா, ரங்கராஜ் பாண்டே, இளவரசு, சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால், ட்ரெய்லரைப் பார்க்கும்போது லட்சுமிகாந்தன் என்ற தனிமனிதன் கதையாகவே இதில் அதிகம் ஃபோகஸ் செய்திருப்பது போல் தோன்றுகிறது.
ரசித்த வசனங்கள்:
"தலையெழுத்துன்னு ஒண்ணு இல்லை. எல்லார் நெத்தியும் காலியாத்தான் இருக்கு; நமக்கு வேண்டியதை நாம்தான் எழுதிக்கணும்."
"ஒரு அரசியல்வாதியோட மகன் அரசியல்வாதியா வர்றப்போ வராத வெட்கம், ஒரு திருடனோட மகன் இன்னொரு திருடனா வரும்போது ஏன் வரணும்?"
"திருடன்னு ஒத்துக்கற அளவு நேர்மையா இருக்கீங்க; ஆனா, நேர்மையே இல்லாம திருட்டுத்தொழில் பண்றீங்க."
பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்த படம்.
ட்ரெய்லரில் ரசித்த வசனங்கள்:
"பவர் எனக்குள்ளே ஓடிட்டே இருக்கணும்; ஒவ்வொரு நரம்பிலும் பவர் இருக்கணும்."
"உன் கண்ணுக்குத் தெரிஞ்சது ஒரு பிரச்சனை மட்டும்தான்; அதுக்குப்பின்னாடி ஒரு உபத்திரவம் மறைஞ்சு கிடக்கு."
'ஸ்பைடர் மேன்', 'சூப்பர் மேன்' மாதிரியான ஒரு படம் இது. மில்லி ஆல்காக் நாயகியாக நடித்த, ஹீரோயின் ஓரியண்ட்டட் ஆக்ஷன் மூவி. இது முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்கான படம்.
170 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் இதுவாகும். இதன் ரன்னிங் டைம் 108 நிமிடங்கள். 'பிரிட்டோ' என்ற நாய்க்குட்டி செண்டிமெண்ட் காட்சிகளில் கலக்கும் போல தெரிகிறது.
ரசித்த வசனங்கள்:
"உங்க ரெண்டு பேரில் ஒருவர் மட்டும்தான் இங்கே இருந்து உயிருடன் தப்பிக்க முடியும்."
"இந்தக் கலர் உனக்குப்பிடிக்குமான்னு தெரியலை. ஆனா, இந்த சிம்பலைப்பார்த்தா மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்."