வணங்கான் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்

Vanangaan
Vanangaan

பல நாட்களாக ரசிகர்கள் காத்திருப்பு லிஸ்ட்டில் இருக்கும் வணங்கான் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி இயக்குனராக வளம் வரும் இயக்குனர் பாலாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பாலா கடைசியாக இயக்கிய வர்மா திரைப்படம் வெளியாகவில்லை. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா, தங்களுக்கு திருப்தியில்லை என வர்மாவை தயாரித்தவர்கள் படத்தை நிராகரித்தனர். பிறகு ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதே கதையை வேறொரு இயக்குநரை வைத்து இயக்கி வெளியிட்டனர்.

இதனால் இந்த படம் பாலாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்பி வர வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பாலா, சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தைத் தொடங்கினார். ஒரு ஷெட்யூல்ட் முடிந்த நிலையில், இந்த படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாலா, “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என அதில் கூறியிருந்தார். இதையடுத்து, வணங்கானில் அருண் விஜய் ஒப்பந்தமானார். ஒரு கையில் பெரியார் சிலையும், மறுகையில் விநாயகர் சிலையுமாக அருண் விஜய் இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதன் பிறகு படம் குறித்த எந்தத் தகவலும் இல்லாமலிருந்தது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஹிட் லிஸ்ட் - ஹிட் லிஸ்டில் இணையுமா?
Vanangaan

அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையின் போது மிஷன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல விபத்தை தாண்டி இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு ஹிட்டாக இருந்தது. தற்போது இவரின் வணங்கான் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வணங்கானில் மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.

பாலாவின் கம்பேக் திரைப்படமாக வணங்கான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே வணங்கான் பட டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.

படம் ஜூலை மாதம் வெளியாகும் என சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே இந்தியன் 2 ஜூலை ரிலீஸ் பட்டியலில் உள்ள நிலையில் வணங்கான் படமும் போட்டிக்கு களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com