32 ஆண்டுகளுக்கு முன்னர் கமல் வைத்து தான் இயக்கிய படத்தை மொக்கைப் படம் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் ஒரு வேர் என்று சொன்னால் அது கமலஹாசன்தான். எத்தனையோ உலகப்படங்களைக் கொடுத்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பக்கலை, மேக்கப் போன்ற அனைத்திலும் சிறந்தவராக இருந்த கமலை தமிழ் சினிமாவின் வேர் என்று சொன்னால்தான் சரி. இப்போது அந்த வேரின் வலிமையால் தென்னிந்திய சினிமா பெரிய அளவு வளர்ச்சிக் கண்டிருக்கிறது. அந்தவகையில் கமல் வைத்து தான் இயக்கிய படம் குறித்து ஆர்.வி.உதயகுமார் பேசியிருக்கிறார்.
ஆர்.வி.உதயகுமார் உரிமை கீதம், கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன், சுபாஷ் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். 80 மற்றும் 90களில் முன்னணி இயக்குநராக விளங்கிய இவர், தற்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “சினிமாவில் சில நேரங்கள் மொக்கைப் படங்களும் ஓடும். அப்படி ஓடிய படம்தான் கமல் சாரை வைத்து எடுத்த ஒரு படம். அந்த படத்தில் கதையே இல்லை. சின்ன குழந்தையா இருக்கிறப்போ, தொலைந்துபோன பெண்ணை கண்டுபிடித்து கல்யாணம் செய்ய வேண்டும். இந்த ஒன் லைனை தயாரிப்பாளர் ஓகே சொன்னதுதான் எனக்கு ஆச்சயர்மே! இளையாராஜா தான் இப்படத்திற்கு இசை.
இப்படத்தின் ரிலீஸுக்கு முன் ரசிகர்களிடம் சொன்னேன். மூளையைக் கழற்றி வைத்துப் படத்திற்கு வாருங்கள் என்று. கதையே இல்லை என்றாலும், நான் திரைக்கதை எழுதுவதில் கவனம் செலுத்தினேன். அதனால் படத்தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என பலவற்றை உள்ளே சேர்த்தோம். படமும் வெற்றி பெற்றது. ஒரு படம் ஜெயிக்க நல்ல கதை மட்டுமல்ல நேரமும் நன்றாக அமைய வேண்டும்.” என்று பேசினார்.
இந்தப் படம் 1992ம் ஆண்டில் கமல், குஷ்பு, மனோ, மனோரமா, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியான சிங்காரவேலன் என்பது குறிப்பிடத்தக்கது.