
இந்தி நடிகர் அபிஷேக்பச்சனும் நடிகை ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோரான நிலையில் சமீப காலமாக இருவரும் விவாகரத்து செய்து பிரியப் போவதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், தம்பதிகள் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன், தாய் பிருந்தியா மற்றும் அபிஷேக் பச்சன் மற்றும் அனு ரஞ்சனுடன் செல்ஃபிக்காக போஸ் கொடுத்தது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் ஒரே நிற கருப்பு ஆடையில் இரட்டையர்கள் போல் காட்சி அளித்தனர்.
அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் விவாகரத்து குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் அம்பானி வீட்டு திருமணத்திற்கு இந்த ஜோடி தனித்தனியாக வந்தபோது இந்த வதந்திகள் உண்மையே என விமர்சிக்கப்பட்டன.
ஐஸ்வர்யா ராய் விழாக்களுக்கு குழந்தையுடன் தனியாக சென்று கலந்து கொள்வது இதனை உறுதிப்படுத்துவதுபோல் உள்ளது என்றும் பேசி வருகிறார்கள். இதுவரை, தம்பதியினர் விவாகரத்து வதந்திகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அபிஷேக் பச்சன் பேசும்போது, "நீண்ட காலமாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தற்போது பிரிந்து செல்கின்றனர். அவர்களின் முடிவைத் தூண்டியது எது, ஏன் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன?" என்று பேசியது விவாகரத்து வதந்திகள் உண்மையே என கூறப்பட்டது.
இதே போன்று கடந்த மாதம், துபாயில் நடந்த உலகளாவிய மகளிர் மன்றத்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் பெண்கள் அதிகாரம் குறித்த உரையை நிகழ்த்தினார். ஐஸ்வர்யா மேடை ஏறியதும், அவருக்குப் பின்னால் பெரிய திரையில் அவரது பெயர் 'பச்சன்' சேர்க்காமல் 'ஐஸ்வர்யா ராய்' என்ற பெயர் போடப்பட்டது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் தம்பதிகள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒரே நிற ஆடையில் கலந்து கொண்டது விவாகரத்து வதந்தி தான் என தெரியவந்துள்ளது.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஏப்ரல் 2007-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.