இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் எங்க தெரியுமா?

இந்தியன் 2 படத்தின்  ஷூட்டிங் எங்க தெரியுமா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப் பட உள்ளதாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியன் 2 படப்பிடிப்புக்காக கமல் 4 நாட்கள் தைவான் நாட்டிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த 1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது . இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் படப்பிடிப்புக்காக கமல் 4 நாட்கள் தைவான் நாட்டிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com