நடிகர் கவினுடன் இணையப்போகும் பிரபல மாஸ் இயக்குநர் யார் தெரியுமா?

Do you know who is the famous mass director Join with  actor Kavin?
Do you know who is the famous mass director Join with actor Kavin?https://chennaimemes.in

மிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இன்று தனக்கென ஒரு தனித்துவமான பெயரையும், புகழையும் பெற்று, இளைஞர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாகத் திகழ்பவர் நடிகர் கவின். இவர் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கிய நாட்களில் இருந்தே இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவரது அடுத்தத் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

கவினின் திரை பயணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகராக தனது நடிப்புப் பயணத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்த கவின், மக்கள் மத்தியில் பிரபலமானார். 2017ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான, ‘சத்ரியன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் கவின் நுழைந்தார். இதற்கிடையில் இவருக்கொரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்ட இவருக்கு மக்கள் மத்தியில் தனக்கு இருந்த பிரபலத்தை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டார்.

இது, இவருக்கு மென்மேலும் திரைப்படங்களில் ஹிரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடித் தந்தது. அதன் பிறகு, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ‘டாடா’ திரைப்படம் இதுவரை கவின் நடித்த திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த வெற்றித் திரைப்படமாகும். அத்திரைபடத்தின் கதைக்களமும் கவினின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகச்சிறந்த விமர்சனங்களை அவருக்குப் பெற்றுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் இளன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக அவர் நடித்து வரும், ‘ஸ்டார்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்ததாக பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் கவின் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கவின் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
அடுத்தடுத்து கலக்கி வரும் தனுஷ்.. மாஸ் இயக்குனருடன் கூட்டணி..!
Do you know who is the famous mass director Join with  actor Kavin?

புதிய திரைப்படத்திற்கான அப்டேட்: படிப்படியாக முன்னேறி, தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் கவின், தற்போது பல திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகர் கவினின் அடுத்த புது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன்தான் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார். வெற்றி மாறனின் கிராஸ் ரூட் கம்பெனி இப்படத்தை தயாரிக்க, அவரது உதவி இயக்குநரான விகர்னன் அசோகன் இந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்தத் திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் கவின் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் திரைப்படங்களில் இணைவது இவரது கடின உழைப்புக்குக் கிடைக்கும் பரிசாகவே கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com