இசையமைப்பாளர் DSP-க்கு இத்தனைப் படங்கள் கைவசம் உள்ளதா?

அனிருத்தை க்ராஸ் செய்துவிடுவாரோ?
DSP
DSP

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே தனது லைனப்பில் 5 படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனால் எப்போதும் பிரபலங்களின் அதிகமானப் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்திற்குப் போட்டியாக டிஎஸ்பி களமிறங்கவுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் 1999ம் ஆண்டு 'தேவி' என்ற தெலுங்குப் படத்தில் இசையமைத்து திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின்னர் 2003ம் ஆண்டு 'இனிது இனிது காதல் இனிது' என்றப் படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் நுழைந்தார். பின்னர் தமிழில் திருப்பாச்சி, மாயாவி, சச்சின், மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், கந்தசுவாமி, குட்டி, சிங்கம், மன்மதன் அன்பு, வேங்கை, அலக்ஷ் பாண்டியன், சிங்கம் 2, வீரம், பிரம்மன், புலி, சாமி 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துத் தனக்கான தனி ரசிகர்களைப் பெற்றார். தெலுங்கில் அதிக படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார்.

அந்தவகையில் டிஎஸ்பி-யின் ரீ எண்ட்ரி படம் என்றால் அது புஷ்பா படம்தான். புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஸ்ரீவல்லி', 'ஊ சொல்றியா' போன்றப் பாடல்கள் டிஎஸ்பிக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பாக அமைந்தன. அதுவும் புஷ்பா படத்தில் வந்தப் பாடல்கள் அனைத்தும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் , தமிழ், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி ஐந்து மொழிகளிலுமே ஹிட் கொடுத்த பாடல்களாகும்.

ஆகையால் டிஎஸ்பி மார்க்கெட்டும் உச்சத்திற்குச் சென்றது. ஒரே படத்தில் ஐந்து மொழிகளிலும் இசையில் ஹிட் கொடுத்த சாதனை இவருக்கே சேரும். இதனைத் தொடர்ந்துதான் தற்போது அடுத்தடுத்த பிரபல ஹீரோக்கள் படங்களில் இசையமைக்கக் கமிட்டாகிவுள்ளார்.

அந்தவகையில் அஜித் நடிக்கப்போகும் குட் பேட் அக்லி, சூர்யாவின் கங்குவா, தனுஷ் நடிக்கவிருக்கும் குபேரா, விஷால் நடிக்கும் ரத்னம் மற்றும் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 ஆகிய படங்கள் இவரின் கைவசம் உள்ளன.

இதையும் படியுங்கள்:
“இந்த நேரத்துல மூச்சு விடவே பயமா இருக்கு “ மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த்!
DSP

இதில் கங்குவா படத்தின் பட வேலைகள் முடிந்துவிட்டன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைபெற்ற கங்குவா படத்தின் டீசர் இசையே வெறித்தனமாக இருந்தது. ஆகையால் புஷ்பா படத்தை போல கங்குவா படமும் டிஎஸ்பிக்கு கைக்கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நான்கு படங்களின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியானதால் இசை பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஐந்து படங்களில் கமிட் ஆன டிஎஸ்பி, இந்த ஆண்டு இன்னும் பல படங்களில் கமிட்டாக வாய்ப்புள்ளது என்றே சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com