ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதியை காண குவிந்த ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ!

Actor Vijay
Actor Vijay

தளபதி விஜய் தற்போது 'GOAT' படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றுள்ள நிலையில், அங்கு ரசிகர்களை அவர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலில் தாவிய நடிகர் விஜய் தற்போது அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு GOAT என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். GOAT படத்தின் போஸ்டர்கள் வெளியானதன் மூலம், விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது வைரலானது.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இந்த படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும், அதன் பிறகு முழு வீச்சில் அரசியலில் செயல்படுவதாகவும் விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்த நிலையில், GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு சென்றிருந்தார். கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தை போன்றே விஜய்யின் படம் ரிலீசான முதல் நாளே பேனர், போஸ்டர் எல்லாம் வைப்பார்கள்.

அப்படி, விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர்கள் கூட்டத்தால், விஜய்யின் கார் சேதமடைந்தன.

இதையும் படியுங்கள்:
நடிகர் பிரித்விராஜின் 'ஆடு ஜீவிதம்'! பிளாக் பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பெறுமா?
Actor Vijay

தற்போது 'GOAT' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே 'GOAT' படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் விஜய் ரசிகர்கள் கூடியதை தொடர்ந்து தளபதி விஜய், அவர்களை ஷூட்டிங் வேன் மீதி ஏறி அனைவரின் அன்புக்கும் நன்றி கூறினார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com