

சினிமா நடிகர், நடிகை எல்லாமே ஸ்டார்தான். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர்கள் வாழ்க்கை மிகவும் சொகுசு (star luxury life). பிரபலமான ஸ்டார்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு ‘கேரவன்’ எனும் சொகுசு பஸ்ஸில் செல்வார்கள். அந்த கேரவனில் எல்லா வசதிகளும் இருக்கும். டாய்லெட், பாத்ரூம், ஹேண்ட் வாஷ் என்று அனைத்தும் இருக்கும். அது மட்டுமல்ல, படுக்க படுக்கையும் இருக்கும். பஸ் முழுக்க முழுக்க ஏ.சி.தான். சாப்பிட டேபிள் மற்றும் சோஃபா இருக்கும்.
இதற்கு உள்ளூர் என்றால் வாடகை ஒரு நாளைக்கு பல பத்தாயிரம் ரூபாய்கள். இதுவே வெளியூர் என்றால் லட்சக்கணக்கில் வாடகை தர வேண்டும். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கேரவனில் வந்து ஒய்வு எடுக்கலாம். இதற்கு பணம் அளிப்பது தயாரிப்பாளர்தான்.
கமல், ரஜினி, திரிஷா, சிம்ரன் அர்ஜுன், விஜய், அஜித் என எல்லா பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் இப்போது கேரவனைத்தான் முதலில் கேட்கிறார்கள்.
லைட் மேன், கேமரா அசிஸ்டெண்ட், அசிஸ்டெண்ட் இயக்குனர், மேக அப், ஸ்டில் போட்டோகிராஃபர், மெஸ் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க மூக்கால் அழும் தயாரிப்பாளர்கள் கதாநாயகன், கதாநாயகி விஷயத்தில் சம்பளம் தவிர கேரவன் வசதியும் செய்து தருகிறார்கள்.
இது சரியா..?
ஒரு பக்கம் வறுமை. மறு பக்கம் செழுமை. ஸ்டார்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்குவது மிகவும் தவறான ஒன்று. சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடும்போது ஸ்டார்கள் கோடிகளை வாங்குவது அநியாயம்.
ஷூட்டிங் நடக்கும்போது ஒரு மணி நேரத்தில் ஸ்டார்களுக்கு ஆப்பிள் ஜுஸ், ஆரஞ்சு ஜூஸ் அல்லது வாட்டர் மேலான் ஜுஸ் கொடுக்கப்படும். மதிய உணவு ஸ்டார்களுக்கு பிரேத்யேகமாக இருக்கும்.
ஸ்டார்கள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் அவர்களோடு சேர்ந்து விருந்து. இது தடபுடலாக இருக்கும். சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்க மீண்டும் கேரவன்தான்.
சினிமாவில் துணை நடிகர், துணை நடிகைகள் படும்பாடு யாருக்கும் தெரியாது. சம்பளமோ குறைவு. மிகவும் குறைவு. குத்தாட்டம், சண்டை காட்சிகளில் துணை நடிகர்கள், துணை நடிகைகள் படும் வேதனை சொல்லி மாளாது. வறுத்து எடுத்துவிடுவார்கள். துணை நடிகைகள் சிறுநீர் கழிக்கக்கூட இடம் இல்லை.
சினிமாவின் கதை பெரிது. வெற்றி வந்தால் இயக்குனர் மற்றும் ஸ்டார்களுக்கு மட்டுமே சந்தோஷம். தொழிலாளர்களை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. பாவம். கடுமையான உடல் உழைப்பு செய்தும் அதற்கு மரியாதை இல்லை.
நமக்கு தெரிந்தது எல்லாம் ஸ்டார்கள் மட்டுமே. ஒரு சினிமா எடுக்க எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று தெரியாது.
அசிஸ்டண்ட் இயக்குனர், கேமிரா அசிஸ்டண்ட், மேக் அப், டைலர், லாண்டரிகாரார், ஸ்டில் போட்டோகிராஃபர், லைட் மேன்கள், மெஸ் ஊழியர்கள், புரோடக்ஷன் மேனேஜர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தனை தொழிலாளர்கள் இல்லை என்றால் சினிமா கிடையாது.
இதில் சண்டை காட்சியில் பங்கு பெறும் துணை நடிகர்கள் பெரும் சோதனையில் உள்ளனர். அவர்களுக்குக் காயம் பட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.
சினிமா எடுப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. கடினமான வேலை. படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க வேண்டும். இல்லை என்றால் பிரச்னைதான். ரசிகர்கள் யாராவது இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாக இருக்கிறார்களா…? இல்லை. இல்லவே இல்லை. அவர்கள் கவனம் முழுக்க ஸ்டார்கள் மீதுதான்.
சினிமா….? கஷ்டமானது…!
லாபம்… ஸ்டார்கள், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கே…!