அன்றே 101 தியேட்டர்களில் வெளியான முதல் திரைப்படம்! டிக்கெட்டில் 6 கேள்விகள்... சரியான பதில் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு!

101 theatres released
Ulagam Movie
Published on

இன்றைய காலகட்டத்தில் ஒரு சினிமா படத்தை எடுத்து முடிப்பதற்குள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. படத்தை எடுத்த பிறகும் கூட, அதனை வெளியிடுவதற்கு போராட வேண்டியுள்ளது. பெரிய தயாரிப்பு நிறுவனங்களைக் காட்டிலும், சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் தான் படத்தை வெளியிடுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றன. பொதுவாக சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் குறைவாகவே கிடைக்கும்.

ஒரு படம் 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில ரிலீஸ் ஆவது இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சினிமாவின் தொடக்க காலத்தில், படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைப்பதே அரிதானது தான். ஏனெனில் முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மட்டுமே தியேட்டர்கள் இருக்கும். இதனால் புதிய படத்தை வெளியிடுவதற்கு தியேட்டர்கள் கிடைப்பதே பெரும்பாடு தான்.

இப்படியான காலகட்டத்தில் ஒரு படம் 100 தியேட்டர்களில் வெளியானால் அது சாதனை தான். அவ்வகையில் முதன்முறையாக 101 தியேட்டர்களில் வெளியான படம் தான் ‘உலகம்’.

1953 ஆம் ஆண்டு எம்.எச்.எம்.மூனாஸ் தயாரிப்பில், எல்.எஸ்.இராமச்சந்திரன் உலகம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் சித்தூர் வி.நாகையா, டி.இ.வரதன், எம்.வி.ராஜம்மா, பி.எஸ்.வீரப்பா, பி.கே.சரஸ்வதி, டி.கே.பகவதி, டி.ஆர்.ரஜனி, எம்.எஸ்.திரவுபதி, எஸ்.எம்.குமரேசன், 'புலிமூட்டை' ராமசாமி, எம்.லட்சுமிபிரபா, 'அப்பா' கே.துரைசாமி, ஜி.சரோஜா மற்றும் 'பேபி' லட்சுமி குமாரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.

அந்த காலகட்டத்தில் ஒரு படம் 50 தியேட்டர்களில் வெளியாவதே பெரிய விஷயமாக இருந்தது. இப்படியான சூழலில் ‘உலகம்’ என்ற திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் 101 தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்தது. இந்தப் படததில் தாராசிங்கின் குத்துச் சண்டை காட்சிகள், லலிதா மற்றும் பத்மினியின் நடனக் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றன. அதோடு அப்போதைய காலகட்டத்தில் சென்னையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளும் படத்தில் இணைக்கப்பட்டன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான உலகம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறாமல் போனது. இருப்பினும் ஒரு படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் தான், மற்ற தயாரிப்பாளர்களுக்கு உண்டாககியது.

இதையும் படியுங்கள்:
சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்ட மாஸ் ஹீரோ: மனம் திறந்த தீபக்!
101 theatres released

உலகம் திரைப்படத்தில் ஒரு ஏழை கணவன், மனைவி திடீரென பணக்காரர்கள் ஆகின்றனர். இதனால் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பது தான் படத்தின் மையக்கரு.

இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியானால், அப்படத்தை விளம்பரம் செய்வதற்கு ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன.

மீடியா துறை அதிகம் வளர்ச்சி பெறாத அன்றைய காலகட்டத்தில் உலகம் திரைப்படத்தை விளம்பரப்படுத்த, ரசிகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார் தயாரிப்பாளர். படம் பார்க்க வாங்கும் டிக்கெட்டில் 6 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். அன்றைய காலத்தில் இது மிகப்பெரும் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக தியேட்டர்களில் வெளியீடு, நட்சத்திர நடிகர்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்த போதிலும் உலகம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் இத்திரைப்படம் தெலுங்கில் ‘பிரபஞ்சம்’ எனற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாக டிரெய்லர் வெளியானது எந்த படத்திற்கு?
101 theatres released

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com