ஐஸ்வர்யா ராய் தனக்கு இந்தப் படத்திலும் கிடைக்கவில்லை!

நடிகர் விக்ரம் வேடிக்கை பேச்சு!
Actor Vikram and Aishwarya Rai
Actor Vikram and Aishwarya Rai
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'பொன்னியின் செல்வன்’ பட ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விக்ரம் " ஐஸ்வர்யா ராய் தனக்கு இந்தப் படத்திலும் கிடைக்கவில்லை" என வேடிக்கையாகக் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர்.

Ponniyin Selvan Movie
Ponniyin Selvan Movie

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது . இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறது.

அதில் கலந்து கொண்ட நடிகை விக்ரம் அதித்ய கரிகாலனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கிய இராவணன் படத்தில் விக்ரம் & ஐஸ்வர்யா ஜோடியாக நடித்திருந்தனர். அதிலும் தற்போது நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இரண்டு படத்திலுமே ஐஸ்வர்யா எனக்கு கிடைக்கவில்லை என நடிகர் விக்ரம் வேடிக்கையாக கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com