

தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அட்டகத்தி தினேஷ். இவர் 20 வருடங்களுக்கு முன்னர் 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து குக்கூ , திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து , ஜே பேபி , லப்பர் பந்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தினேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் அவர் நிறைய திரைப்படங்களில் நடிப்பது இல்லை.
தினேஷ் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டதாகவும் , அதே நேரம் அவரது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் தேர்வு செய்கிறார். குக்கூ திரைப்படத்தில் அவர் பார்வையற்றவராக மிகவும் இயல்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அதேபோல் அவர் நடித்த 'விசாரணை' திரைப்படம், பார்வையாளர்களை கதிகலங்க வைக்கும் அளவிற்கு, அவரது நடிப்பு திறனை காட்டி இருப்பார்.
இதை தொடர்ந்து தினேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'லப்பர் பந்து' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்ததுடன் , திரைப்படமும் பிளாக்பாஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இவரது திரை அடையாளம் ‘கெத்து தினேஷ்’ என்று மாறியது.
அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பா.ரஞ்சித் தினேஷினை திரையில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவரது கபாலி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தினேஷ் நடித்திருந்தார்.
ற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் தினேஷ் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து 'பந்தா கேங்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள தினேஷ் நீண்ட காலமாக சிங்கிளாக இருக்கிறார். பொதுவாக திரைப்படம் சார்ந்த விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்து கொள்ள மாட்டார். வெற்றிகரமான தொழில் வாய்ப்பு கொண்டுள்ள தினேஷ், நீண்ட காலம் கழித்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்.
விரைவில் அவர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவிக்க இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில், தான் ஒருவரை தீவிரமாக காதலித்து வருவதாகவும், அது குறித்து அறிவிப்பை விரைவில் தான் அறிவிப்பேன் என்று மறைமுகமாக கூறியிருந்தார்.ஆனாலும் தினேஷ் காதலிக்கும் பெண் யார்? என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. பதிவின் மூலம் தினேஷின் காதலி பொதுவெளிக்கு அறிமுகமானார்.
பிரபல விஜே எழிலரசி தினேஷின் பிறந்தநாள் அன்று , அவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். அந்த பதிவில் "என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! எப்போதுமே உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும். வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த எந்தவொரு பயணமாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் நான் உங்களை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜே எழிலரசியின் காதல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறி வருகிறது. பலரும் அந்த ஜோடிகளுக்கு வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.