“கோதாவரி” சம்சாரம் அது மின்சாரம் பட நடிகை காலமானாரா? உமா ரியாஸ் சொன்னது என்ன?

Kamala kamesh
Kamala kamesh
Published on

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரியாக நடித்த கமலா காமேஷ் இன்று காலை உயிரிழந்துள்ளதாக செய்திகள் பரவின. ஆனால், அது முற்றிலும் பொய் என்று உமா ரியாஸ் மறுத்துள்ளார்.

இசையமைப்பாளர் காமேஷின் மனைவி கமலா. இதுவரை இவர் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 1971 ஆம் ஆண்டு வெளியான 'குடிசை' என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கமலா காமேஷ், அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார். பின்னர் குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த லட்சுமி அம்மாள் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து இவருக்கு தொடர்ந்து அம்மா கதாப்பாத்திரங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், அந்த கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். அந்த வகையில் மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், மூன்று முகம், கோபுரங்கள் சாய்வதில்லை, ஆகாய கங்கை, எங்கேயோ கேட்ட குரல், போன்ற ஏராளமான படங்களில் நடித்தார். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி எந்த கதாபாத்திரத்தில் நடித்தார். இன்றும் இந்த படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுதான் வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், இன்றைய இளைஞர்களுக்கு கோதாவரி என்று சொன்னால்தான் கமலாவை தெரியும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மனதை பிடித்தது.

இதையும் படியுங்கள்:
HMPV Virus - "அச்சமோ பீதியோ அடையத் தேவை இல்லை" - Dr V. ராமசுப்ரமணியன் (specialist - infectious diseases) தரும் விளக்கம்.
Kamala kamesh

இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள கமலா காமேஷ் மாங்கல்யம், ஆனந்த பவன், போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து இவரும் மகள் உமா ரியாஸும் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்தார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த உமா, பின்னர் அன்பே சிவம், கனவு மெய்ப்பட வேண்டும், மௌனகுரு, அம்புலி, மரியான், பிரியாணி, தூங்காவனம், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
2022-ல் ஆஸ்திரேலியாவில் எனக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது: ஜோகோவிச்!
Kamala kamesh

இவர் நடிகர் ரியாஸை திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில்தான் இவர்களின் மகனுக்கு திருமணம் நடந்தது.

இப்படியான நிலையில், கமலா காமேஷ் இன்று காலை உடல் நலக் குறைவால் இறந்ததாக செய்திகள் பரவின. இதுகுறித்து உமா ரியாஸ் பேசும்போது, “எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அவர் என்னுடன் சென்னை வீட்டில் இருந்தார். வயோதிக காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 72." என உமா ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கமலா காமேஷ் இறப்பு குறித்தான செய்தி ஒரு வதந்தி என்பது உறுதியானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com