மெகா ஸ்டார் மம்முட்டியின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரமயுகம்!

Megastar Mammootty in a different role BRAMAYUGAM
Megastar Mammootty in a different role BRAMAYUGAM

மெகா ஸ்டார் மம்முட்டி நடித்து இன்று வெளியாகி இருக்கும் மலையாளத் திரைப்படம் பிரமயுகம். மலையாளத்தில் மட்டுமே வெளியாகி இருக்கும் இந்தத் திரைப்படம் நடிகர் மம்முட்டி இதுவரை நடித்து வெளிவந்துள்ள திரைப்படங்களிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மம்முட்டி, "இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்று நினைக்கிறேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தத் திரைப்படத்தைக் காண திரையரங்குக்கு வாருங்கள்" என்றார்.

பல மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள ‘பிரமயுகம்’ திரைப்படம் இன்று மலையாளத்தில் மட்டுமே வெளியாகி உள்ளது. காரணம், படத்தின் ஒரிஜினல் வெர்ஷனை மூல மொழியிலேயே ரசிகர்கள் ரசித்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக மலையாளத்தில் முதலில் வெளியிடப்படுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. சில நாட்களுக்குப் பின்பு மொழி மாற்றம் செய்யப்பட்டு, ‘பிரமயுகம்’ திரைப்படத்தை கன்னடம், தமிழ், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடத் திட்டமிடப்பட்டு உள்ளது.

மாயம், மாந்திரீகம் போன்ற பின்னணியில் இந்தத் திரைப்படம் செல்கிறது. ‘பூதகாலம்’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியத் திரைப்பட உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ராகுல் சதாசிவம் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். புதிய முயற்சியாக இந்தத் திரைப்படம் கருப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகப்படுத்தி உள்ளது என்று கூறலாம்.

இதையும் படியுங்கள்:
5 நாட்களில் லவ்வர் படம் செய்த சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா?
Megastar Mammootty in a different role BRAMAYUGAM

ஷிப்ட் மற்றும் ஒய் நாட ஸ்டூடியோ இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரித்து உள்ளார்கள். மம்முக்காவின் (மம்மூட்டி) மாறுபட்ட கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் கண்டு ரசிக்க தயாராவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com