

இளையராஜா இசையில் சந்தோஷ் தேவாக்கர் இயக்கத்தில் கோந்தல் என்ற மராட்டி படம் வெளியாகி உள்ளது. இந்த படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராட்டி உட்பட ஏழு மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படம் பரவலான நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் 99 ஆவது அகாடமி அவார்ட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த மராட்டி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் ஒரு 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கிராமம். அங்கே இந்த படத்தின் ஹீரோ யோகேஷ் சோகனிக்கும், ஹீரோயின் இஸ்தா தேஸ்முக்கிற்கும் திருமணம் நடக்கிறது. இதன் பிறகு அவர்கள் குலதெய்வத்திற்கு சில சடங்குகள் செய்கிறார்கள். அது முழுக்க இரவு நேரங்களில் நடக்கிறது. இந்த குலதெய்வ சடங்கில் தெருக்கூத்து நடத்தப்படுகிறது. இந்த கூத்தில் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இஸ்தா விருப்பம் இல்லாமல்தான் யோகேஷை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த கூத்தை பயன்படுத்தி இந்த திருமண பந்தத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார். அவரது முன்னாள் காதலனும் அந்த கூத்திற்க்கு வந்து கூத்து நடத்துபவனாக இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் ஊர் தலைவரின் மகனும் இஸ்தாவை அடைய நினைக்கிறார். தனது காதலனை வைத்து தான் மணந்த கணவனையும், தலைவரின் மகனையும் கொலை செய்யலாம் என்று திட்டம் போடுகிறார். இந்த திட்டம் நிறைவேறியதா? என்று சொல்கிறது இந்த படம்.
இளையராஜா மேஜிக்...
எந்தவிதமான மாறுபட்ட இசை இருந்தாலும் அதை உள்வாங்கி தனது ஹார்மோனியத்தில் அனைத்து மக்களும் கேட்கும் விதத்தில் கொண்டு வருவதில் மிகச் சிறந்தவர் நமது இசைஞானி இளையராஜா. அதனால்தான் மராட்டியில் இருக்கும் இயக்குனர் கூட தனது படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைத்துள்ளார். முழுக்க முழுக்க தெருக்கூத்தின் பின்னணியில் நடக்கும் இந்த கதைக்கு அதுவும் மராட்டிய தெருக்கூத்தில் இருக்கக்கூடிய அழகியலையும் நமது இளையராஜாவை தவிர வேற யாரும் இந்த அளவுக்கு சிறப்பாக இசையமைத்திருக்க முடியாது என்பது நிதர்சனம்.
பல இடங்களில் இளையராஜா எந்தவித இசையும் தராமல் அமைதியாக கடத்திருக்கிறார். அதன் பிறகு மெலிதாக அவருடைய இசையை மீட்டுகிறார். இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது. படம் முழுக்க இரவு நேரத்தில் நடக்கிறது. எந்த உதவி மின்சார வசதியும் இல்லாமல் வெறும் லந்தார் தரும் விளக்கு வெளிச்சத்திலேயே ஒட்டுமொத்த கூத்து நடக்கிறது.
அந்த வெளிச்சம், இருட்டு அதற்கு இளையராஜாவின் இசை பின்னணியில் மிகப் பிரமாதமாக இருக்கிறது. ஒரு மராட்டி மாநிலத்தில் நடக்கும் தெருக்கூத்தை கூட தனது இசையில் அனைத்து மக்களும் கேட்கும் அளவிற்கு மிகவும் பிரமாதமாக தந்துள்ளார் இளையராஜா என்று சொல்வதை விட ஒரு மேஜிக் செய்துவிட்டார் ராஜா என்று தான் சொல்ல வேண்டும்.
சபாஷ் நடிப்பு...
இந்த படத்தில் ஹீரோவாக வரும் யோகேஷ் ஒரு அப்பாவி போல் நடித்து இறுதியில் ஒரு ட்விஸ்ட் தருகிறார். தனது கேரக்டரை மிக அழகாக உள்வாங்கி சிறப்பாக நடித்து இருக்கிறார். நடிப்பில் ஹைலைட்டாக இருப்பது இஸ்தார் தேஷ் முக். அழகுக்கு பின்னே ஒரு ஆபத்து இருக்கும் என்று சொல்லுவார்கள் அதை தனது நடிப்பில் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வருகிறார்.
வெளியே ஒன்றை வைத்து உள்ளே பேசும் நபர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதை தனது நடிப்பில் மூலம் காட்டிவிட்டார் இஸ்தா. இவர்கள் இருவரை தவிர ஊர் பெரியவராக நடிப்பவர், கூத்து நடிக்கும் நடிகர்கள், ஊரில் உள்ள மிக முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே மிகச் சிறப்பாக நடி த்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரையும் மிகப் பிரமாதமாக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் இயக்குனர்.
திரைக்கதை...
பல சாதாரண தெருக்கூத்து கதை போல ஆரம்பிக்கும் இந்த கதை ஒரு முதல் அரை மணி நேரம் மிக சாதாரணமாக செல்கிறது. அதன் பிறகு தான் படத்தின் கதை என்ன என்பதை நமக்கு புரிய வருகிறது. கதை களம் என்பது தெருக்கூத்து நடக்கும் அந்த இடமும் அதை சுற்றியுள்ள இடங்களும் மட்டும்தான் என்பதில் மிக கவனமாக இருந்து படத்தை சுவாரஸ்யமாக எழுதுவதில் டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம். இது போன்ற திரைக்கதை எழுதுவதற்கு ஆழ்ந்த அறிவும் சரியான புரிதலும் இருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு அற்புதம்..
மிகப்பெரிய லைட்டிங் இல்லை, வித்தியாசமான தொழில்நுட்பங்கள் எதையும் ஒளிப்பதிவாளர் பயன்படுத்தவில்லை. ஒரு 60 ஆண்டுகளுக்கு முந்தைய மராட்டிய கிராமத்தை அதுவும் குறிப்பாக மின்சார வசதி எதுவும் இல்லாத ஒரு கிராமத்தை லாங்கர் விளக்குகளின் வெளிச்சத்தில் மிக அற்புதமாக நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
நுண்ணிய உணர்வுகள் இரவு நேர மராட்டிய கிராமம் என ஒளிப்பதிவில் அனைத்தும் அட்டகாசமாக இருக்கிறது. இந்த படத்தில் பெரிய அளவில் எந்த மைனஸ் பாயிண்டுகளும் இல்லை. படம் மெதுவாக நகர்வது ஒரு மைனஸ் போன்ற உனக்கு தோன்றினாலும் அதுதான் பிளஸ் என்று கிளைமாக்ஸ் இல் நமக்கு புரிகிறது. கிளைமாக்ஸ் நாம் யோசித்து விட முடியாத ஒரு ஆச்சரியம் ஒன்று இருக்கிறது.
பொதுவாக விருதுக்காக தயாரிக்கும் படங்கள் அனைத்துமே ஜனரஞ்சகமான விஷயங்கள் குறைவாக இருக்கும். ஆனால் இந்த படம் விருதுக்கான அனைத்து தகுதிகளும் இருந்தாலும் சில ஜனரஞ்சகமான விஷயங்களும் இருக்கின்றன. சிறு சிறு நகைச்சுவை கிளைமாக்ஸ் காட்சியில் வரும் நாம் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் என பல விஷயங்களை சொல்லலாம்.
இந்த படம் விருது படம் என்று நாம் ஒதுக்கி விட வேண்டியது இல்லை தைரியமாக அனைவரும் சேர்ந்து பார்க்கலாம். இளையராஜா இசையில் ஒரு மராட்டிய கிராம பின்னணியை பார்க்க விரும்புவர்களுக்கு கோந்தல் நல்லதொரு திரைப்படமாக இருக்கும்.
மின்சார வசதியற்ற மகாராஷ்டிர கிராமத்தின் எதார்த்தமான அழகும் சூழலும், ஒலியும் காட்சியும் மூலம் வாசகர்களின் கண்முன்னே உயிர்பெறுகிறது.