தியேட்டரையே அதிர வைக்குதா ராமாயணா? ரன்பீர் - யாஷ் மிரட்டல் திரை விமர்சனம்!

நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி உள்ள ராமாயணா படத்தின் முழு திரை விமர்சனம்.
ராமாயணா
ராமாயணா
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங் (3.5 / 5)

நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்வீர் கபூர் ராமனாகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வெளிவந்திருக்கும் படம் ராமாயணா. மிகுந்த எதிர்பார்ப்பில், அதிகபட்ச பொருள் செலவில் வந்திருக்கிறது. சரி இந்த படம் எப்படி இருக்கிறது? இந்த படத்தின் திரை அனுபவம் எப்படி என்பதை இங்கே காணலாம். 

நமக்குத் தெரிந்த கதை தான். அதனால் இந்த கதையை நாம் இங்கே விவாதிக்க வேண்டியது இல்லை. ஆனால் கதை ஆரம்பித்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதாவது ராமாயண கதையில் ராமன் அவதாரத்திற்கான தேவை ராவணனிடம் இருந்து தொடங்கியது என்பதை இந்த படம் காட்டுகிறது. தேவர்களிடம் தோற்ற அசுரர்கள் இலங்கையில் அடிமையாக இருந்தபோது ராமனின் தாய் ராவணனுக்கு வீரத்தை ஊட்டி எப்படி மிகச்சிறந்த பலசாலியாக்குகிறாள் என்று கதை தொடங்குகிறது.

ஒரு கட்டத்தில் இது ராமாயணமா அல்லது ராவணயணமா என்று நாம் யோசிக்கும் வேலையில் டக் என்று காட்சிகள் மாறி அயோத்திக்கு சென்று விடுகிறது. இந்த ராமாயண கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் இதை எப்படி விசுவலாக காட்டி இருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பு படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வந்து விடுகிறது. காரணம் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உயிர் கொடுத்து இருக்கிறார்கள். ஜடாயு, ஐராவத யானை, அரக்கர்கள், இலங்கை குபேரன் நகரம் இப்படி ஒவ்வொரு இடத்தையும் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். காட்சிக்கு காட்சி சிறிது தெய்வீகமும் இருக்கிறது. அதே சமயத்தில் பிரம்மாண்டமும் இருக்கிறது. நம்பர் ஒன் பாராட்டு கதாபாத்திரத் தேர்வு தான்.

ராமாயணா
ராமாயணா

படத்தில் முதல் பத்தாவது நிமிடத்திலேயே வந்துவிடும் யாஷ் ராவணனாக நடித்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் மிகவும் சாதாரணமானது தான். மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் பேசும் வசனமும் ஒரு இறுக்கமாக முகமும் ராவணன் ஏன் இவ்வளவு ஒரு பாலசாலியாக இருக்கிறான் என்று உணர வைக்க விடுகிறது. 

மண்டோதரியாக வரும் காஜல் அகர்வால், ராவணனின் அம்மாவாக வரும் ஷோபனா இருவரும் சிறந்த தேர்வுகள். இதன் பிறகு ராமனாக வரும் ரன்வீர் கபூர் நாம் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் படைத்த ராமனின் அனைத்து லட்சணங்களையும் முகத்தில் கொண்டிருக்கிறார். ஒரு சாத்வீகமான முகத்துடன், ஒரு புன்னகையுடன் நடிக்கும் இடம் மிகவும் பிரமாதமாக உள்ளது. 

1987-ல் தூர்தர்ஷன் ராமாயணத்தில் ராமனாக நடித்த நடிகர் தான் இந்த படத்தில் தசரதராக நடித்திருக்கிறார். வரத்தை தந்து விட்டு பின்னாளில் ராமா என்று உயிர்விடும் இடத்தில் நாம் ஒவ்வொருவரும் வாய் திறந்து ராமா என்று சொல்லும் அளவுக்கு இவரின் நடிப்பு இருக்கிறது. நாம் இதற்கு முன்பு வந்த ராமாயண திரைப்படங்களிலும் இராமாயண தொலைக்காட்சி தொடர்களிலும் நிறைய சீதை கேரக்டரை பார்த்திருக்கிறோம்.

இவர்களிடம் இல்லாத ஒரு அழகும் ஒரு சிறப்பான நடிப்பும் சீதைக்கு உரியவராக சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார் சாய்பல்லவி. இராமனும் ராவணன் கதாபாத்திரங்கள் இந்த படத்திற்கு இரண்டு தூண்கள் என்றால் சீதையின் கதாபாத்திரம், இவரின் நடிப்பு படத்தின் அஸ்திவாரம் என்று சொல்லலாம். ஒளிப்பதிவு, AI என பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளார்கள். இதில் வி எப் எக்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது. அரண்மனை காட்சிகளும், பனி சருக்கல்களில் நடக்கும் சண்டைகளும் உலக சினிமாவுக்கு இணையான ஒரு திரைப்படமாக இப்படத்தை சொல்ல வைக்கிறது.

ஏ.ஆர். ரகுமானின் இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிரை தருகிறது. இருந்தாலும் இரண்டு பாடல்கள் இவர் ஏற்கனவே இசையமைத்த பாடல்களின் சாயலில் இருப்பது ஒரு குறை தான். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் நீளமுள்ள இந்த படத்தில் நம்மை சற்றும் திரையில் இருந்து கண்ணை அகல விடாமல் செய்வது படத்தின் பிரம்மாண்டம் தான். 

ராமாயணா
ராமாயணா

இந்த பிரம்மாண்டத்தை நிதேஷ் திவாரி மிகச் சிறப்பாக அந்த கலைஞர்களிடமிருந்து வாங்கி இருக்கிறார். படத்தில் மெயின் கேரக்டர்கள் மட்டுமில்லாமல் சிறிய சிறிய கேரக்டர்கள் கூட மனதில் நிற்கிறார்கள். விசுவாமித்ரராக வருபவர், லக்ஷ்மணனாக நடிப்பவர், பரதனாக நடிப்பவர், கூனியாக நடிக்கும் பெண்மணி இப்படி பலரை சொல்லலாம். 

இதையும் படியுங்கள்:
இராமாயணத்தில் ராவணன் ஏன் சீதையை தொடவில்லை? அவனைத் தடுத்த சாபம் என்ன?
ராமாயணா

படத்தில் ஒரே ஒரு குறை அது என்ன? இந்த படத்தில் ஒரே ஒரு குறை ஒன்று உள்ளது. தேவர்களுக்கும், அரக்கர்களுக்கும் நடக்கும் சண்டையில் அரக்கர்களை AI தொழில்நுட்பத்தில் காட்டியுள்ளார்கள். இது இதற்கு முன் வந்த நரசிம்மா இன்னும் பல புராண இதிகாச படங்களில் வரும் கதாபாத்திரம் போலவே சித்தரித்துள்ளார்கள். இது ஏஐ என்று தனியாக தெரிவது ஒரு குறை தான். இதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருந்தால் இராமாயணா தொழில்நுட்பத்தில் சிறிதும் பிசிர் இல்லாத படம் என்று அடித்து சொல்லலாம்.

இருந்தாலும் ராமாயணா திரைப்படம் உங்களுக்கு தியேட்டரில் பார்க்கும்போது நாம் கேட்டு வளர்ந்த கதையை இவ்வளவு பிரமாண்டமாக தர முடியுமா? என்று உணர்வு ஏற்படும். நமது ராமாயண மகாபாரதக் கதைகளை குழந்தைகளுக்கு சொல்ல முடியவில்லை. வீட்டில் பெரியவர்கள் இல்லையே இருந்தாலும் சொல்வதற்கு நேரம் இல்லை என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சந்தோஷப்படும் விதமாக இந்த ராமாயண திரைப்படம் வந்திருக்கிறது. குழந்தைகளை அழைத்துச் சென்றால் கண்டிப்பாக ஒரு முழு ராமாயண கதையை பார்த்த உணர்வு ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்:
ரூ.4000 கோடி ராமாயணம் ட்ரெய்லர் வெளியீடு: சாய் பல்லவி சீதைக்கு எழும் விசித்திரமான ட்ரோல்கள்!
ராமாயணா

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது தியேட்டர் அனுபவம் கொண்டு தரும் படம். கண்டிப்பாக இந்த படத்தை நீங்கள் தியேட்டரில் பார்த்தால் மட்டும்தான் இந்த அனுபவத்தை முழுமையாக உணர வேண்டும். நமது கதையை இவ்வளவு சிறப்பாக உதவிய இந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.

வாசகர்கள் தியேட்டருக்குச் சென்று படத்தைக் காணும் தூண்டுதலைப் பெறுவதுடன், பிரம்மாண்டமான விஷுவல் அனுபவத்தைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவார்கள்.