ஜிவிஎம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம்தான் விண்ணைத்தாண்டி வருவாயா? அதன் பின்னர் இருவரும் இரண்டு மூன்று படங்களில் இணைந்தார்கள். இதனையடுத்து மீண்டும் இருவரும் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
உடல் எடை அதிகம் காரணமாக சிம்பு பல நாட்கள் அவதிப்பட்டார். அவரே ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசினார். அதாவது “செக்க சிவந்த வானம் படத்தில் இந்த உடம்பை வைத்து ஓடவே முடியவில்லை. கால்கள் நடுங்கிவிட்டன. அப்போதுதான் புரிந்தது நாம் எவ்வளவு வீக்காக இருக்கிறோம் என்பது. ஆகையால், உடற்பயிற்சி செய்து மீண்டும் உடல் எடையை குறைத்தேன். இதனையடுத்து மாநாடு படத்தில் ஓடும்போது எந்த வலியும் இல்லை. அனைவரும் பாராட்டினார்கள்.” என்று பேசினார்.
உடல் எடையை குறைத்தப் பிறகு இவருடைய கம்பேக் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதற்கு அடுத்து வெளியான ஈஸ்வரன், மாநாடு, வெந்து தனிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தன.
தற்போது சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம்தான் இது. அடுத்த ஆண்டு பெரிய லைனப்பே இருக்கிறது. தேசிங்கு பெரியசாமியுடன் ஒரு படம் மற்றும் அஸ்வத் மாரிமுத்து உடன் ஒரு படமும் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக மீண்டும் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கனவே மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற அனைத்து படங்களுமே மிகவும் ஹிட்டான படங்கள்.
ஆகையால் இந்த வெற்றிக்கூட்டணி சேர்ந்தால் மீண்டும் ஒரு வெற்றித்தான். இந்த படத்தின் கதை வெற்றிமாறனுடையது என்றால் சொல்லவே தேவையில்லை. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவே இருக்கும். வெற்றிமாறனுடன் சிம்பு இதுவரை படம் பண்ணவில்லை. இதுவே முதல்முறையாகும்.
வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த வேலைகள் முடிந்தவுடன் கதையில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் சிம்புவும் தனது லைனப்பில் உள்ள படங்களை விரைவில் முடித்துவிடுவார் என்றே சொல்லப்படுகிறது.