மேடையில் அநாகரிக சொற்களை பேசியதற்கு மிஷ்கின் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், நடிகர் அருள்தாஸும் கடுமையாக பேசியிருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கின் பல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். எப்போதும் அவருடைய படங்களில் சர்வதேச படங்களின் சாயலை காண முடியும். ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும். இவர் அடிக்கடி நேர்காணல் மற்றும் ப்ரோமோஷன்களில் கலந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற படங்களுக்கும் ப்ரோமோஷன் செய்ய அவரை அழைக்கின்றனர்.
எப்போதுமே அவர் திட்டுவதும் புகழ்வதும் ஒரே மாதிரிதான் இருக்கும். இதுவரை எந்த எதிர்ப்பும் எழாத நிலையில், சமீபத்தில் மேடையில் பேசியபோது மிகவும் அநாகரிகமான வார்த்தைகள் மற்றும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. தொடர்ந்து சினிமா வட்டாரத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், நடிகர் அருள்தாஸும் மிஷ்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம்.
“உலக படங்கள், உலக புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்கிறீர்கள். என்ன அறிவு இருக்கிறது உங்களுக்கு? குறைந்தபட்சம் நாகரீகம் கூட வேண்டாமா?
ஒரு மேடையில் பேசுற பேச்சா இது. எல்லோருக்கும் பெண் குழந்தை இருக்கு. மேடை நாகரீகம் என்பது முக்கியம். எல்லோரையும் சகட்டு மேனிக்கு வாடா என்கிறார், போடா என்கிறார். தொடர்ந்து பல மேடைகளில் இப்படி தான் பேசி வருகிறார் மிஷ்கின். பாலாவை அவன் இவன் என்கிறார், இளையராஜாவை அவன் என்கிறார். யாருடா நீ? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? ஒரு போலி அறிவாளி. உலக சினிமாவை காபி அடித்து படம் பண்ணி ஜெயிச்ச போலி அறிவாளி மிஷ்கின்." என்று பேசியிருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை மிஷ்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.”
மரியாதை இல்லாமல் பேசுவது, கெட்ட வார்த்தை பேசுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.