Ajith kumar
Ajith kumar

அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்... ஸ்கெட்ச் போடும் இயக்குனர்!

Published on

அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களும் எப்போதான் படம் வரும் என காத்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மன நிம்மதிக்காக அவ்வபோது ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த பட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான வேலைப்பாடு பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
நடிகர் கவினுடன் இணையப்போகும் பிரபல மாஸ் இயக்குநர் யார் தெரியுமா?
Ajith kumar
Disha Patani  & Mrunal Thakur
Disha Patani & Mrunal Thakur

பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் தான் மிருணாள் தாகூர். இப்போது மிருணாளை தான் அஜித்துடன் நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அவர் தற்போது வரை எந்த முடிவு சொல்லவில்லை என்பதால் அடுத்த ஆப்ஷனாக பாலிவுட் பிரபல நடிகை திஷா பதானியை தேர்வு செய்துள்ளனர். இருவரில் யாரோ ஒருவர் அஜித்துடன் ஜோடி போடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com