

ஹாலிவுட் சினிமாவிற்கு தற்போது ஒரு வசந்த காலம் வந்துள்ளது. சமீபத்தில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி திரைப்படம் உலகம் எங்கும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு தகுந்தவாறு படத்தின் வெற்றியும் பெரியதாக அமைந்துள்ளது. தி ஒடிசி திரைப்படத்தின் மாபெரும் வெற்றி அடங்கும் முன்பே , அதைவிட மிகப்பெரிய வெற்றியை தி 'ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே ' திரைப்படம் பெற்றுள்ளது.
ஒரே சமயத்தில் இந்த இரண்டு திரைப்படங்களும் உலகம் முழுக்க வசூலை வாரி குவித்து வருகின்றன. இந்த இரண்டு திரைப்படத்திற்கும் போட்டியாக ' அவெஞ்சர்ஸ் - டூம்ஸ் டே 'திரைப்படம் நிச்சயமாக இருக்கும். அந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அதன் அட்வான்ஸ் புக்கிங் வரலாற்று சாதனையை படைத்து வருகிறது.
ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் , கிரேக்க இதிகாசமான 'தி ஒடிசி ' காவியத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைக்கதையை ஏற்கனவே ஒரு சிலர் எடுத்து இருந்தாலும், நோலனின் கைவண்ணத்தில் திரைப்படம் எவ்வாறு இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இதற்கு முன்னர் அவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் , எளிதில் புரிந்து கொள்ள முடியாத அறிவியல் புனைவுகளாகவும் , முக்கிய கதாபாத்திரங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும். அதனால், இந்தத் காவியத்தை மூலம் தன்னுடைய பாணிக்கு மாற்றாமல் , அந்த காலகட்டத்திற்கு மனிதர்களை கொண்டு சென்றதைப் போல் மிகவும் இயல்பாக காட்சி அமைத்திருந்தார்.
தி ஒடிசி திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ₹12,922 கோடி வசூலைக் குவித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. நோலன் திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய வசூலை எந்த திரைப்படமும் குவித்தது இல்லை. சுமார் ₹2250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், அமெரிக்காவில் சுமார் ₹4,939 கோடியும், சர்வதேச அளவில் சுமார் ₹7,992 கோடியும் வசூலித்துள்ளது. இந்தியாவில் கூட ₹200 கோடிக்கும் அதிக வசூலை பெற்றுள்ளது.
இந்த சாதனைக்கு மகிழும் முன்னரே திரையிடப்பட்ட சில நாட்களிலேயே 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் தி ஒடிசியின் வசூலையும் மிஞ்சியுள்ளது. இதுவரைக்கும் இந்த திரைப்படம் மொத்தமாக ₹19,526 கோடி என்கின்ற அசுர வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியதால் தி ஒடிசி திரைப்படம் வசூலில் பின் தங்க ஆரம்பித்தது. படம் வெளியிட்ட முதல் வாரத்திலேயே ₹8,921 கோடி வசூலை குவித்து ஹாலிவுட்டையே மிரள வைத்துள்ளது.
அமெரிக்காவை தவிர்த்து இதன் சர்வதேச மொத்த வசூல் ₹11,773 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இந்த திரைப்படம் ₹500 கோடி பாக்ஸ் ஆபிஸ் என்ற மிகப்பெரிய இலக்கை அடைந்துள்ளது. இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களின் மொத்த வசூலில் அமெரிக்காவில் வசூலித்தது தான் அதிகமாக இருக்கும் , மற்ற நாடுகளில் குறைவாக இருக்கும். ஆனால் , தி ஒடிசி மற்றும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படங்களில் வசூலில் அமெரிக்காவை விட சர்வதேச நாடுகளில் வசூலித்தது அதிகமாக உள்ளது. இரண்டு திரைப்படங்களிலும் டாம் ஹாலன்ட் நடித்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.