கேம் சேஞ்சர் படத்தில் 5 பாடல்களுக்கு இத்தனை கோடியா? வெளியான தகவல்!

Game changer
Game changer
Published on

சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் ஐந்து பாடல்களுக்கு மொத்தமாக இத்தனை கோடிகள் செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம் சரணின் RRR படம் இந்திய அளவில் செம்ம ஹிட் கொடுத்தது. அதன்பின்னர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் Game changer என்ற படத்தில் நடித்து வருகிறார். இது சங்கரின் தெலுங்கு அறிமுகமாகும். இப்படத்தில் ராம் சரண் ஒரு கலெக்டராக நடித்து வருகிறார் என்ற செய்திகள் வெளியாகின. மேலும் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. தமன் இசையமைக்கிறார். இப்படம் பொங்கல் சிறப்பு படமாக ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் சுமார் 400 கோடி செலவில் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
''நான் கிரித்தி தோசை இல்லை" - 'நோஸ்கட்' கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்
Game changer

நமக்கே தெரியும், இயக்குநர் சங்கர் எதற்கு செலவு செய்கிறாரோ இல்லையோ பாடலுக்கு அளவுக்கு அதிகமாகவே செலவிடுவார். இது அவரின் ஸ்டைல் என்றே கூறலாம். இதனால் இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம்.

அந்தவகையில் இந்தப் படத்தின் 5 பாடல்களுக்கு மொத்தமாக 92 கோடி  செலவு செய்துள்ளாராம் சங்கர். அதிலும் 'ரா மச்சா மச்சா' என்ற பாடலுக்கு மட்டுமே ரூ.20 கோடி செலவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சாணக்ய நீதி கூறும் கணவன் - மனைவி உறவு... வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும்?
Game changer

அப்படி என்னத்தான் அந்த பாடலில் இருக்கிறது என்று கேட்டால் அது யாருக்குமே தெரியாது.

ஒரு பாடலுக்கு இத்தனை தொகை அவசியமா? என்றுதான் ரசிகர்கள் கேட்கின்றனர். ஏனெனில், இதே பணத்தை தொழில்நுட்ப ரீதியாக செலவிட்டால், படத்தின் தரம் அதிகரிக்கும். குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை எடுக்கும் மலையாள படங்களே இதற்கு உதாரணம்.

இதனை நாம் சொல்லி என்ன பயன். பொருத்திருந்து பார்ப்போம். அப்படியென்ன அந்த பாடல்களில் இருக்கிறது என்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com