திரையரங்கு வசூல் கணக்கிடப்படுவது எப்படி?

theater collections calculation
theater collections calculationImg credit: AI Image
Published on

திரைப்படம் ஒன்று நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்தது என்ற செய்தி வந்தால், அந்தப் பணம் முழுவதும் தயாரிப்பாளருக்கோ அல்லது நடிகருக்கோ சென்றுவிடும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் உண்மையில், திரையரங்கு வசூல் என்பது பல நிலைகளில் பகிரப்படும் ஒரு சிக்கலான பொருளாதார அமைப்பு ஆகும். இதில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் ஆகியோருக்கு தனித்தனி பங்கு உண்டு.

1. மொத்த வசூல் மற்றும் நிகர வசூல்:

ஒரு திரைப்படத்தின் வருமானம் டிக்கெட் விற்பனையிலிருந்து தொடங்குகிறது. ரசிகர்கள் செலுத்தும் மொத்தத் தொகையே மொத்த வசூல்எனப்படும். இதில் GST (12% அல்லது 18%) போன்ற வரிகள் அடங்கும்.

இந்த வரிகளை கழித்த பிறகு கிடைக்கும் தொகையே நிகர வசூல் ஆகும். தொழில்துறையில் ஒரு படத்தின் வெற்றி அல்லது தோல்வி பெரும்பாலும் இந்த நிகர வசூலை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.

2. திரையரங்கு பங்கு:

நிகர வசூலில் இருந்து முதலில் ஒரு பகுதி திரையரங்கு உரிமையாளர்களுக்கு செல்கிறது. இது Multiplex மற்றும் Single Screen திரையரங்குகளுக்கு மாறுபடும். மேலும், படம் புதியதாக இருக்கும் போது தயாரிப்பு தரப்புக்கு அதிக வருமானம் கிடைக்கும்; நாட்கள் செல்லச் செல்ல திரையரங்கு பங்கு அதிகரிக்கும்.

3. விநியோகஸ்தரின் பங்கு:

திரையரங்கு பங்கை கழித்த பிறகு கிடைக்கும் தொகையே Distributor Share எனப்படும். இதுவே ஒரு படத்தின் வணிக வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான அளவுகோல்.

இதையும் படியுங்கள்:
முத்து படத்தில் ரஜினிக்கு டூப் போட்ட பிரபல காமெடி நடிகர் இவர் தான்.. அவரே சொன்ன பதில்.!
theater collections calculation

விநியோகஸ்தர், தயாரிப்பாளரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட விலைக்கு படத்தின் உரிமையை வாங்கியிருப்பார். திரையரங்குகளில் இருந்து வரும் பங்கு, அவர் முதலீடு செய்த தொகையை மீறினால் மட்டுமே அவருக்கு லாபம் கிடைக்கும்.

4. விநியோக முறை:

திரைப்படம் எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்பதைக் கொண்டு லாபப் பகிர்வு மாறும். முக்கியமாக மூன்று மாடல்கள் உள்ளன:

  • Outright Sale: விநியோகஸ்தர் முழு உரிமையை வாங்கி, லாபம்/நஷ்டம் அனைத்தையும் ஏற்றுக்கொள்வார்.

  • Minimum Guarantee (MG): முன்பணம் கொடுத்து உரிமை வாங்கி, அதற்கு மேல் வரும் லாபத்தை தயாரிப்பாளருடன் பகிர்ந்துகொள்வார்.

  • Commission Basis: தயாரிப்பாளரே படம் வெளியிட்டு, விநியோகஸ்தருக்கு கமிஷன் மட்டும் வழங்குவார்.

5. தயாரிப்பாளரின் வருமானம்:

திரையரங்கு வசூல் மட்டுமல்லாமல், தயாரிப்பாளருக்கு பல்வேறு வழிகளில் வருமானம் கிடைக்கிறது. சாட்டிலைட் உரிமைகள், ஓடிடி மற்றும் டிஜிட்டல் தளங்கள் உரிமைகள், ஆடியோ ரைட்ஸ், Overseas distribution. இவை பல நேரங்களில் திரையரங்கு வசூலை விட கூடுதல் லாபத்தை தரக்கூடியவை.

இன்றைய காலத்தில் வசூல் விவரங்கள் முழுமையாக வெளிப்படையாக இருக்காது என்று சிலர் கூறுகின்றனர். மேலும், இணையவழி டிக்கெட் முன்பதிவு வசதிக் கட்டணங்கள் போன்றவை மொத்த வசூலில் சேராமல் தனியாக வசூலிக்கப்படுகின்றன.

அதனால்,வசூல ஒரு பொதுவான மதிப்பீடு மட்டுமே; உண்மையான பகிர்வு ஒப்பந்தம், பகுதி மற்றும் திரையரங்கு வகையைப் பொறுத்து மாறுபடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com