கணவன் மாமியார் வீட்டில் வாழ முடியுமா? சமூகக் கண்ணோட்டத்தை உடைக்கும் 'பியார் பிரேமா கல்யாணம்' கதை!

பெண்ணியத்தையும் ஆண்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்களையும் பேசும் புதுமையான கதைக்களம்.
பியார் பிரேமா கல்யாணம்
பியார் பிரேமா கல்யாணம்Chatgpt
Updated on
ரேட்டிங்(3 / 5)

திருமணத்திற்குப் பின்பு ஒரு பெண் கணவர் வீட்டிற்கு செல்கிறாள் இது நமது நாட்டின் மரபு. அதே சமயத்தில் திருமணமான பின்பு அந்த ஆண் தனது மனைவியின் இல்லத்திற்கு வாழ சென்று இருக்கிறானா? இந்த கேள்வியை நாம் யோசித்து இருக்க மாட்டோம். நாம் யோசிக்காத இந்த ஒன்லைனை கையில் எடுத்து பியார் பிரேமா கல்யாணம் என்ற படத்தை தந்திருக்கிறார் இளன். இப்படத்தில் இளன் ஹீரோவாகவும் நடத்தியிருக்கிறார். சான்வி மேகனா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தில், எம் எஸ் பாஸ்கர், கீதா கைலாசம் போன்றவர்களும் நடித்துள்ளார்கள் இப்படத்திற்கு நிவேதிதா கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

இளன், சான்வி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. "நான் என் அப்பா அம்மாவை விட்டு உன் வீட்டிற்கு வந்தேன் " என்கிறார் சான்வி. இந்த வாதம் முற்ற ஒரு கட்டத்தில் இளன் "நான் உன் வீட்டில் வந்து வாழ்கிறேன்" என்கிறார். 'ஒரு ஆனால் மனைவி வீட்டில் வந்து வாழ முடியாது' என்கிறார் சான்வி. இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு தனது மாமியார் வீட்டில் வந்து வாழ்கிறார் இளன்.

இதன் பிறகு இவர் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். இந்த பிரச்சனை என்ன? இது இவர்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதித்தது? என்று சொல்கிறது பியார் பிரேமா கல்யாணம்.

பிளஸ்.... பொதுவாக நாம் அதிகமாக யோசிக்காத மனைவி வீட்டிற்கு கணவன் சென்று வாழ்வது என்ற ஒன்லைனை வைத்து ஒரு கதை எடுத்தற்காக இளனை பாராட்டலாம். ஒரு பெண் தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் சென்ற பிறகு அவளுக்கான விருப்பங்கள், தேவைகள் எப்படி புகுந்த வீட்டிற்கு ஏற்றார் போல் மாறிவிடுகிறது என்பதை படத்தில் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.

பியார் பிரேமா கல்யாணம்
பியார் பிரேமா கல்யாணம்Chatgpt

ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். பெண்ணுக்கு உரிமையாகவும் பெண் சுதந்திரமாகவும் பார்க்கப்படும் வேலை ஆணுக்கு ஒரு கடமையாக பார்க்கப்படுகிறது வேலை இல்லாத ஒரு ஆண் தனது சுற்றத்தார் சுற்றத்தார்களாலும் குறிப்பாக மாமியார் வீட்டில் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை மிக நிதர்சனமாக காட்டியுள்ளது இப்படம். பெண்ணுரிமை மட்டும் பேசாமல் ஆண்களுக்கும் ஒரு உணர்வு உள்ளது அவர்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்று சில இடங்களில் டைரக்டர் சொல்கிறார்.

இளன் மாமியார் வீட்டில் இருக்கும் கேரக்டர்கள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. மாமியாராக வரும் ராதிகா மாப்பிள்ளையை விருந்து மரியாதை என்ற தட புடலாக கவனிக்கிறார். அதே மாப்பிள்ளை வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் போது வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் செய்யச் சொல்கிறார். இந்த காட்சி வரும்போது பல ஆண்கள் கைதட்டுவதை பார்க்க முடிந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு செந்தில் நடித்திருக்கிறார். மிக எதார்த்தமாக அளவான நகைச்சுவையில் சிரிக்க வைக்கிறார். செந்தில் "ஒரு சிகரெட் இங்க இருக்கு இன்னொரு சிகரெட் எங்கே"? என்று கேட்கும் இடத்தில் பழைய வாழைப்பழ காமெடியை நினைவிற்கு கொண்டு வருகிறார். நகைச்சுவையும் மிரட்டலும் கலந்த ஒரு புதுவித ஸ்டைலில் நடித்திருக்கிறார் ராதிகா.

சோகத்தை கூட சிரித்து மறைக்கும் கேரக்டரில் நலன் நன்றாக நடித்து இருக்கிறார். இன்றைய இளைஞர்களின் ஈகோ எப்படி அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை நடிப்பின் மூலம் காட்டியுள்ளார் இளன். ஹீரோயினாக வரும் சான்வி இதற்கு முன் சில படங்களின் நடித்திருந்தாலும் இந்த படத்தில் தான் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உள்ளே காதலை வைத்துக் கொண்டு ஈகோ என்ற ஒற்றை விஷயத்தில் தடுமாறும் பவித்ராவாக சிறந்த நடிப்பை தந்துள்ளார் சான்வி.

இதையும் படியுங்கள்:
நெட்பிளிக்ஸின் லேட்டஸ்ட் ஃபீல் குட் வெப் சீரிஸ் 'Musafir Cafe' விமர்சனம்!
பியார் பிரேமா கல்யாணம்

யுவனின் இசையில் இரண்டு காதல் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஆண், பெண் சமத்துவம் பேசினாலும் கூட பல தாய்மார்களுக்கு இன்றும் தனது மகன்கள் வீட்டு வேலை செய்வது, அதிலும் குறிப்பாக மனைவிக்கு சமையலில்,, பிற கிச்சன் வேலைகளில் உதவியாக இருப்பதை பார்த்தால் தாங்கிக் கொள்ள முடியாது இதே போன்ற ஒரு காட்சி படத்தில் இருப்பது பல தாய்மார்களின் மனோ நிலையை காட்டுவதைப் போல உள்ளது.

மைனஸ்...படத்தின் மிகப்பெரிய பலமும் ரசிக்கும் படியான சில காட்சிகளும் இரண்டாம் பாதியிலேயே உள்ளன. படத்தின் முதல் பாதி மிகவும் சராசரியாக உள்ளது. இது ஒரு மைனஸ் தான். இளன் தாய் தனது உடல்நிலை சரியில்லாதது போல் நாடகமாடும் இடங்கள் லாஜிக்காக இல்லை.

இதையும் படியுங்கள்:
மாமியார்கள் வில்லிகளாக மட்டுமே சித்தரிக்கப்படுவது ஏன்? சீரியல் இயக்குனர்கள் யோசிக்க வேண்டும்!
பியார் பிரேமா கல்யாணம்

இளன் சான்வி நடிக்கும் ஒரு சில நெருக்கமான காட்சிகளை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெண்கள் உரிமை,பெண் சுதந்திரம் இவற்றோடு சேர்த்து ஆணுக்கான உணர்வையும் ஆண் சமூகத்தில் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளையும் சொன்னதற்காக பியார் பிரேமா கல்யாணம் படத்தை பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பின் கணவன் மனைவி வீடேறி வாழும்போது எதிர்கொள்ளும் சமூகப் பார்வைகள், மன அழுத்தம் மற்றும் குடும்ப உறவுகளுக்கு இடையேயான பிணைப்புகளைப் பற்றிய தெளிவான புரிதலையும், ஆணும் பெண்ணும் சமம் எனும் புதிய கோணத்தையும் இந்த விமர்சனம் உங்களுக்குத் தரும்.

logo
Kalki Online
kalkionline.com