அப்பாஸை அன்று அடிக்கப்போனேன் - பாவா லட்சுமணன்!

Aanandham Cast
Aanandham Cast
Published on

ஆனந்தம் படத்தில் நடித்தது குறித்தும் அப்பாஸ் படப்பிடிப்பில் செய்தது குறித்தும் நடிகர் பாவா லட்சுமணன் பேசியதைப் பார்ப்போம்.

2001ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவையானி, ரம்பா, ஸ்னேகா ஆகியோர் சேர்ந்து நடித்த படம்தான் ஆனந்தம். முழுக்க முழுக்க ஒரு குடும்ப படமாக எடுக்கப்பட்ட இந்த படம் டிவியில் போட்டால் இன்றைய இளைஞர்கள் கூட வாயைப் பிழந்துப் பார்க்கும் படம்தான் இது. இப்போது வரும் ஆக்ஸன் படங்களுக்கு நடுவில் ஒரு ஃபீல் குட் படம் பார்க்க வேண்டும் எனில், பலரும் ஆனந்தம் படத்தைதான் விரும்பிப் பார்க்கிறார்கள். அந்தவகையில் இன்றும் பலரின் மனம் கவர்ந்த படமான இந்தப் படத்தில் நடித்தது குறித்து பாவா லட்சுமணன் பேசியிருக்கிறார்.

பாவா இந்தப் படத்தில் ஒரு திருடனாக வந்து அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாறி படம் முழுக்க விஸ்வாசியாக பயணம் செய்வார். இவர் சிறந்த காமெடி நடிகராவார். இதுவரை வடிவேல், விவேக் போன்ற முன்னணி காமெடியன்களுடன் சேர்ந்து நடித்தவர். ஆனந்தம் இவருக்கு இரண்டாவது படமாகும். அதன்பின்னர்தான் பல படங்களில் சிறப்பாக நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தார். கடைசியாக இவர் நடித்த படம் 2021ம் ஆண்டு வெளியான ஈஸ்வரன் படம்.

இதையும் படியுங்கள்:
2025-ல் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்... ரசிகர்களை கொண்டாட வைக்கும் அப்டேட்!
Aanandham Cast

அந்தவகையில் இவர் ஆனந்தம் படத்தில் அப்பாஸ் செய்த விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறார். அதுகுறித்துப் பார்ப்போம்.

“ஆனந்தம் படம் காஞ்சிபுரத்தில் ஷூட்டிங் பண்ணும்போது அவ்வளவு பெரிய மெகா ஸ்டாரே 6:30 மணிக்கெல்லாம் வந்துட்டாரு. அப்பாஸ் 8 மணி வர வரவில்லை. நாலு அண்ணன் தம்பிகள் இருந்தால்தான் அந்த சீனே எடுக்க முடியும். அப்பாஸ் வந்ததும் என்ன கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கீங்க என்று கேட்டேன். அப்படித்தான் வர முடியும் என்று சொன்னாரு. அப்போ நான் அவர அடிக்கவே போய்ட்டேன். அதுக்கப்புறம்தான் ஒழுங்கா வந்தாரு.” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் டாப் 10 நடிகை நடிகர்கள்… 2024ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியீடு... ஒரே ஒரு தமிழ் நடிகைதானா?
Aanandham Cast

நடிகர்களின் பொறுப்பை எடுத்துரைக்கும் ஒரு செயல்தான் சரியான நேரத்தில் வருவது. பல முன்னணி நடிகர்கள் நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததால்தான் பெரிய ஹீரோவாக வந்தார்கள் என்று பலர் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலுமே நேரத்திற்கு செல்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com