2024ம் ஆண்டின் இறுதி கட்டத்தை நோக்கி செல்கிறோம். அந்தவகையில் இந்த ஆண்டின் டாப் 10 நடிகை நடிகர்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் நடிகைதான் இடம்பெற்றிருக்கிறார்.
பாலிவுட், டோலிவுட், மாலிவுட், கோலிவுட் என இந்திய சினிமாவின் லிஸ்ட் மிகப்பெரியது. இதில் பாலிவுட்டே மிகப்பெரிய சினிமா உலகம் ஆகும். அந்தவகையில் இந்த வருடத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட டாப் 10 நடிகர் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது. இதனை Most Popular Indian Stars of 2024 என்ற லிஸ்ட்டை IMDb தளம் வெளியிட்டு இருக்கிறது.
முதலிடத்தில் இருப்பது அனிமல் படத்தில் நடித்த திருப்தி டிம்ரி. இவர் இந்தப் படத்தில் நடித்ததாலேயே மிகவும் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடத்தில் தீபிகா படுகோன். இவர் கல்கி படத்தில் நடித்தது குறித்தும், கர்ப்பமாக இருந்த காலத்திலும் அதிகம் பேசப்பட்டார்.
மூன்றாவது இடத்தில் இஷான் கட்டர் (ஹிந்தி நடிகர்) பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்டார். நான்காவது இடத்தில் ஷாருக்கானும், ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபாலாவும் உள்ளனர். 6வது இடத்தில் இந்தியா முழுவதும் ஹிட் கொடுத்த முஞ்ச்யா படம் நாயகி ஷர்வாரி உள்ளார். எட்டாவது இடத்தில் சமந்தா உள்ளார். சமந்தா மட்டுமே இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ் நடிகை ஆவார்.
மேலும் ஆலியா பட் 9ம் இடமும், தெலுங்கு நடிகர் பிரபாஸ் 10ம் இடத்திலும் இருக்கின்றனர்.
மேலும் பிரபாஸ் மட்டுமே தெலுங்கு ஹீரோக்களில் இதில் இடம்பெற்ற ஒரே நடிகர்.
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஷோபிதா, பிரபாஸ் மற்றும் சமந்தா ஆகியோரே இடம்பெற்றுள்ளனர். மற்ற அனைவருமே பாலிவுட் நடிகை நடிகர்கள் ஆவார்கள்.
சோபிதா நாக சைதன்யா திருமணமே சோபிதா மற்றும் சமந்தா டாப் லிஸ்ட்டில் வர காரணமாயிற்று. ஏனெனில் ரசிகர்கள் தொடர்ந்து இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
பிரபாஸ் இந்த லிஸ்ட்டில் வந்ததற்கு காரணம் அவரின் ஹிட் படங்களே. குறிப்பாக கல்கி படம் இந்திய அளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.