இதயம் முரளி: ஆட்டோகிராப் மற்றும் ஜீன்ஸ் கலவையில் உருவான காதல் காவியமா?

மூன்று காலகட்டங்கள், குழப்பமான ட்வின்ஸ் காதல் - ஆகாஷ் பாஸ்கரனின் இதயம் முரளி விமர்சனம் இதோ!
திரை விமர்சனம்|idhayam murali
திரை விமர்சனம்|idhayam muraliAI image
Updated on

இதயம் முரளி திரை விமர்சனம்: கதையும் சுவாரசியமும்!

யக்குநர் சேரன் நடித்த ஆட்டோகிராப் (2004) 50% + முரளி நடித்த இதயம் (1991) 40% + ஷங்கரின் ஜீன்ஸ் (1998)10% இந்த மூன்று படங்களை வைத்து ஒரு படமாக எடுத்தது தான் இந்த இதயம் முரளி!

இதயம் படத்தில், படத்தின் நாயகன் தன் காதலை தான் காதலித்த நபரிடம் சொல்ல முடியாமல் தவிப்பார். ஆட்டோகிராப் படத்தில் வருவது போல் ஸ்கூல் லவ், காலேஜ் லவ், ஆபீஸ் லவ் என வெவ்வேறு கால கட்டங்களில் தான் விரும்பிய வெவ்வேறு பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல் நாயகன் தவிப்பது தான் கதை. ஜீன்ஸ் பட மேட்டர் எங்கே எப்படி வருகிறது என்பது சஸ்பென்ஸ்.

ஸ்பாய்லர் அலெர்ட்:

நாயகன் வெளிநாட்டில் (யு எஸ் சில்) வேலை செய்பவன். நாயகனின் மாமா அவருக்கு போன் பண்ணி "நாளை உனக்குக் கல்யாணம். எப்போக் கிளம்புவே? எப்போ வருவே?" எனக்கேட்க, நாயகன் பிளைட்டில் கிளம்புகிறான்.

நாயகன் விமானப் பயணத்தின் போது தனது பள்ளிக்காதல், காலேஜ் காதல், ஆபீஸ் காதல் என எல்லாக் காதல்களைப் பற்றியும் சொல்கிறான். மூன்று காதல் சம்பவங்களிலும் நாயகன் தன் காதலை யாரிடமும் சொல்லி இருக்க மாட்டார்.

திருச்சியில் நாயகன் பள்ளிப்படிப்பு படிக்கும்போது ஒரு நாயகியை சந்திக்கிறார். காதலிக்கிறார். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட். நாயகன் பார்த்தது, காதலித்தது ஒரு நாயகியை. நாயகிக்கு ஜீன்ஸ் படத்தில் வருவது போல் ஒரு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்கிறார். இதில் குழப்பம் நேர்கிறது. நாயகன் ட்வின்ஸ் இருவரில் யாரை லவ் பண்ணினார் என்று அவருக்கே தெரியவில்லை.

பிறகு சென்னையில் காலேஜ் படிக்கும்போது இன்னொரு நாயகியை சந்திக்கிறார், காதலிக்கிறார். இங்கேயும் காதலை சொல்லவில்லை.

பிறகு நண்பனின் திருமணத்தில் எல்லோரையும் சந்திக்கிறார். யாரிடம் காதலை சொன்னார்? யாருடன் கல்யாணம் நடந்தது?என்பது க்ளைமாக்ஸ்!

திரை விமர்சனம்|idhayam murali
திரை விமர்சனம்|idhayam murali

நாயகனாக அதர்வா. இதயம் பட முரளி கேரக்டர் கலகலப்பாக, ஜாலியாக இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் இவர் கேரக்டர் டிசைன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா நடித்திருக்கிறார்கள்.

ப்ரீத்தி முகுந்தனின் ஆடை வடிவமைப்பு அருமை. கயாடு லோஹர் குடும்பப்பாங்காக, கண்ணியமான உடையில் வருகிறார்.

நாயகனின் நண்பனாக இசை அமைப்பாளர் தமன், யூ ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர் நடிப்பு கச்சிதம். நாயகனின் தாய்மாமாவாக. வரும் நட்டியின் நடிப்பு சுமார் ரகம் தான்.

பகத் பாசில் , சின்னி ஜெயந்த் இருவர் நடிப்பும் அருமை. டீச்சராக வரும் ஜொனிட்டா மனதில் தங்குகிறார். விரைவில் தனி நாயகி ஆகலாம். பப்லு கடுப்பேற்றும் விதத்தில் நடித்திருக்கிறார். டிராவிட், ரக்சன் ஆகியோர் நடிப்பு பரவாயில்லை ரகம்.

மனோஜ் பரமஹம்சன், சாய் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கண்ணுக்குக் குளுமையான காட்சிகள். எஸ் தமனின் இசையில் 5 பாடல்கள். ஓக்கே ரகம். பிரதீப் ஈ ராகவின் எடிட்டிங்கில் முதல் பாதி ஜாலி , கலகலப்பு. பின் பாதி இழுவை.

ரன்னிங் டைம் 164 நிமிடங்கள்.

இயக்கி இருப்பவர் ஆகாஷ் பாஸ்கரன்.

சபாஷ் டைரக்டர்

1. ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒத்திக்கொள்வது போல் பிரம்மாண்டமாக எடுத்த விதம். குறிப்பாக நாயகிகள் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் இருவரையும் அழகாகக்காட்டிய விதம் அருமை.

2. யூ ட்யூப் பிரபல காமெடியனின் காமெடி டிராக் கலகலப்பு.

3. இதயம் பட ரெப்ரன்ஸ். சின்னி ஜெயந்த் மூலம் தருவதும், அந்த டயலாக்சும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது.

4. 90ஸ் கிட்சை கவரக்கூடிய நாயகனின் ஸ்கூல் போர்ஷன் அருமை.

இதையும் படியுங்கள்:
Pritam and Pedro: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான புதிய காமெடி த்ரில்லர் சீரிஸ் – முழு விமர்சனம்!
திரை விமர்சனம்|idhayam murali

5. கெஸ்ட் ரோலில் வரும் பகத் பாசிலை வைத்து பிளாஸ்பேக் சொல்லவே உங்களை நேர்ந்து விட்டிருக்காங்க என ஓப்பனிங்கில் காமெடியும் செய்து அவரை வைத்து க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட்டும் கொடுத்தது அடடா.

6. எஸ். தமனின் மெலோடி இசை குட். எல்லாப் பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது.

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. படத்தில் பாடல்கள் அடுத்தடுத்து கேப் விடாமல் வருவது ஏனோ? இரு பாடல்களுக்கு இடையே போதிய இடைவெளி வேண்டும் என்ற அடிப்படை விதியை பின்பற்ற வேண்டாமா?

2. யூ ட்யூப் சேனலில் பிரமாதமாகக் காமெடி செய்யும் பரிதாபங்கள் புகழ், சுதாகர் படத்தில் அந்த அளவு குவாலிட்டி இல்லை.

3. பல காட்சிகள் பல படங்களில் பார்த்ததாக இருப்பது மைனஸ். பிரெஷ் ஆக யோசித்திருக்கலாம்.

4. படத்தில் எங்குமே எமோஷனல் கனெக்ட் ஆகவே இல்லை.

இதையும் படியுங்கள்:
சென்சார் சர்ட்டிபிகேட் வந்தாச்சு.. ஆனா KVN அமைதியா இருக்க என்ன காரணம்? இதோ பகீர் தகவல்!
திரை விமர்சனம்|idhayam murali

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+

கல்கி கமெண்ட் :

முதல் பாதி கல கல, பின் பாதி இழுவை. திரைக்கதை, காட்சி அமைப்புகளில் புதுமை இல்லை. ஓக்கே ரகம் தான். பிரமாதம் எல்லாம் இல்லை.

ரேட்டிங். 2.5/5

இந்த விமர்சனத்தை வாசிப்பதன் மூலம், வார இறுதியில் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படமா இது என்பதை உங்களால் தெளிவான முடிவெடுக்க முடியும். பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும் ஒரு முழுமையான வழிகாட்டி இது.

logo
Kalki Online
kalkionline.com