அருள் மாதேஸ்வர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த இளையராஜாவின் பயோபிக் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்ற ஆண்டு இறுதியிலிருந்தே தனுஷ் இளையராஜாவின் பையோ பிக்கில் நடிப்பார் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆகையால் அவ்வப்போது X தளத்திலும் தனுஷ் மற்றும் இளையராஜா ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தன. அதேபோல் பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் மீண்டும் சீக்கிரம் அறிவிப்பு வெளியாகும் என்று இணையத்தில் பேசப்பட்டது. இதனையடுத்து தனுஷ் இளையராஜா பயோ பிக்கில் நடிப்பதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. பெரிய நிகழ்ச்சி ஒன்றே நடத்தப்பட்டது
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளராக இளையராஜா வலம் வருகிறார். இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இன்றும் இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு தனது இசையின் மூலம் சவால் விட்டு வருகிறார். சமீபத்தில் அவரது இசையில் வெளியான விடுதலை 2 படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன.
அவருடைய வாழ்க்கையை படமாக எடுக்கும் ஐடியா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெர்குரி மூவீஸ் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான கதையை கமல் எழுதுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவரின் பனிச்சுமை காரணமாக அது நடக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது.
இப்படியான நிலையில், இளையராஜா பயோபிக் ட்ராப் ஆகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வர் மற்றும் தனுஷ் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் பட்ஜெட் பெரிய பிரச்னையாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷ் இந்த படத்திற்காக நிறைய நாட்கள் செலவு செய்ய வேண்டி உள்ளது.
தற்போது தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களில் பிசியாக உள்ளார். தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு ராயன் படம் வெளியானது. அதனை தொடர்ந்து NEEK என்ற படத்தை இயக்கிய முடித்துள்ளார், இந்த படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்தடுத்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிஸி லைனப்பிற்கு இடையே இளையராஜா பயோபிக் உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.