குதிரைகள் மனித சமுதாயத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மனிதர்களின் அன்றாட மற்றும் தொழில் வாழ்க்கையில் குதிரைகள் மிகவும் உதவியாக இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதன்மையான போக்குவரத்து சாதனங்களாக குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. விவசாயத்திற்கும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. வயல்களை உழுவதற்கும், அதிக சுமைகளை சுமப்பதற்கும், பண்ணை இயந்திரங்களை இயக்குவதற்கும் உதவியாக இருந்தன. போரிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கடினமான நிலப்பரப்பில் செல்லவும், காணாமல் போனவர்கள் அல்லது இயற்கை பேரழிவுகளில் தப்பியவர்களைக் கண்டறிவதற்கும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. குதிரை சவாரி, உல்லாசப் பயணம், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளுக்கு வழிகாட்ட சுற்றுலா பயணிகளுக்கு உதவுகின்றன. சர்க்கஸிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
குதிரைகளைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:
1. குதிரைகளால் நின்று கொண்டே தூங்க முடியும். அவை தங்கும் கருவி என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையை பயன்படுத்தி அவற்றின் மூட்டுகளை அசையாமல் ஒரு இடத்தில் நிற்க வைத்து, நின்று கொண்டே ஓய்வெடுக்க உதவுகின்றன.
2. எந்த நிலப் பாலூட்டிகளிலும் இல்லாத அளவு மிகப்பெரிய கண்கள் குதிரைகளுக்கு உண்டு. குதிரையின் பெரிய கண்கள் தலையின் பக்கங்களில் அமைந்துள்ளன. அவற்றின் சுற்றுப்புறங்களை கிட்டத்தட்ட 360 டிகிரியில் பார்க்க முடியும்.
3. குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது. வாந்தி எடுப்பதை தடுக்கும் தனித்துவமான செரிமான அமைப்பு அதற்கு உள்ளது. அவற்றின் உணவுக் குழாய் மற்றும் வயிறு ஒரு வளையம் போன்ற தசையால் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றில் வாந்தி வரும் உணர்வுமில்லை மற்றும் வாந்தி எடுப்பதும் இல்லை.
4. குதிரைகளுக்கு சிறந்த வாசனை உணர்வு உண்டு. மிகவும் உணர்த்திறன் வாய்ந்த வாசனை உணர்வை இவை கொண்டுள்ளன. அவற்றின் சூழலில் நுட்பமான மாற்றங்களைக் கண்டறிய முடியும்.
5. மனிதர்களுக்குக் கேட்க முடியாத அளவு அதிகமான ஒலிகளை குதிரைகளால் கேட்க முடியும். மனிதர்களைக் காட்டிலும் பரந்த அளவிலான செவித்திறனை கொண்டுள்ளன. நம்மை விட அதிகமான ஒலிகளை இவற்றால் கேட்க முடியும்.
6. குதிரைகள் மந்தை விலங்குகள். எனவே, பிற குதிரைகளுடன் சேர்ந்து வளரும். அவை அவை ஒரு சிக்கலான சமூகப் படிநிலையைக் கொண்டுள்ளன. உடல் மொழி மற்றும் குரல் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன.
7. குதிரைகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 25லிருந்து 30 ஆண்டுகள் வரை இருக்கும். சில வகையான குதிரை இனங்கள், உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் போன்ற காரணிகளைப் பொறுத்து நீண்ட அல்லது குறுகிய ஆயுளைக் கொண்டிருக்கின்றன.
8. குதிரைகள் நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவை. ஒரு நாளைக்கு 76 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும். குறிப்பாக, அவை தொடர்ந்து ஓடுவது அல்லது உடலுக்கு வேலை கொடுக்கும் சமயங்களில் எவ்வாறு அதிக தண்ணீரைக் குடிக்கின்றன.
9. குதிரைகளின் நடை தனித்துவமானது. அவற்றின் குளம்புகள் மற்றும் கால்களால் தனித்துவமான வழியில் நகர முடியும். வேகமாக ஓட உதவுகின்றன.
10. குதிரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. மத்திய ஆசியாவில் கி.மு. 4000 முதல் 3500ல் குதிரைகள் முதல் முதலில் வளர்க்கப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன.
11. குதிரைகள் வேகமாக ஓடும் திறன் பெற்றவை. குதிரை இனத்தில் வேகமான இனமான தோரோப்ரட் மணிக்கு 45 மைல்கள், அதாவது 72 கிலோமீட்டர் வரை ஓடக் கூடியது. இவை மனிதர்களைப் போலவே வாயில்களை திறப்பது அல்லது பொருட்களை எடுப்பது போன்ற பணிகளை செய்யும்போது இடது அல்லது வலது காலை உபயோகப்படுத்துகின்றன.