

இம்மார்ட்டல் என்றால் அழிக்க முடியாத பெரும் சக்தி என்று அர்த்தம்.
எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். தமிழ் சினிமாவின் முதல் 'வேம்ப்பயர் காமெடி பேண்ட்டசி சினிமா' என்று இதை சொல்லலாம். டெக்னிக்கலாக மிரட்டி இருக்கும் இந்தப் படம் திரைக்கதையில் கலக்கி இருக்கிறதா? என்பதைப் பார்ப்போம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
மெயின் கதைக்குப் போகும் முன் ஒரு பிளாஸ்பேக்.
1000 வருடங்களுக்கு முன் ஒரு தம்பதி... மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கிறார். குழந்தை பிறந்ததும் அதைப் பார்த்து அம்மாவே பயப்படுகிறார். இது சாதாரண குழந்தை இல்லை என பிரசவம் பார்த்த அந்த மூதாட்டி வேறு பயமுறுத்துகிறார். அந்தக் குழந்தையை ஒரு மலை உச்சியில் விட்டு விடுகிறார்கள். இந்த சீனை இங்கேயே கட் பண்ணி 2026 க்கு கதை நகருது.
நாயகன் சென்னையில் தனது மாமாவின் பிரிண்ட்டிங்க் பிரஸ்சில் வேலை செய்கிறான். தங்குவதற்கு வாடகை வீடு பார்க்கிறான். தனி வீடாக வாடகைக்குப் போனால் செலவு அதிகம் ஆகும், அதனால் 5 பேர் சேர்ந்து ஒரு வீட்டை ஷேர் பண்ணி ஷேர் ஆட்டோ போல் பண்ணிக்கிட்டா செலவு குறையும் என்று நினைக்கிறான்.
தேடி வந்த தேவதை மாதிரி நாயகி நாயகனுக்கு போன் செய்கிறாள். நான் தங்கி இருக்கும் வீட்டில் ஷேரிங்க் பார்ட்னராக வந்து தங்கிக்கொள்கிறீர்களா? என்று கேட்கிறாள். திண்ணையில் படுத்துக் கிடந்தவனுக்கு திடுக்னு வாழ்வு வந்த கதை தான்.
இலவசமா அருகம்புல் ஜூஸ் கிடைச்சாலே குடிப்பவன் கரும்பு ஜூஸ் கிடைச்சா வேணாம்னா சொல்வான்? ஓக்கே என்கிறான்.
வீட்டுக்கு வந்து பார்த்தா அது வீடு இல்லை, பங்களா. அதுக்கு 5,000 ரூபாய் தான் வாடகை என்றதும் நாயகனுக்கு செம குஷி.
நாயகியுடன் வீட்டில் தங்குகிறான். நாயகியைக் கவர அவ்வப்போது முயற்சிகள் செய்து வருகிறான். நாயகியும் நாயகனுக்கு நல்ல கம்பெனி தருகிறாள்.
நாயகன், நாயகி இருவரும் நட்பாகப் பழகி நெருக்கமாகும் போது நாயகனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. நாயகி சாதாரண மனிதப் பெண் அல்ல. ஏதோ அமானுஷ்யம் அவளிடம் இருக்கிறது.
இது தெரிந்ததும் நாயகன் உஷாராகி அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான், முடியவில்லை. நாயகியின் கட்டுப்பாட்டில் அந்த வீடு இருக்கிறது என்பதை உணர்கிறான்.
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை.
நாயகனாக ஜி.வி பிரகாஷ் குமார் பிரமாதமாக நடித்திருக்கிறார். இதுவரை இது போல் ஒரு நல்ல ரோல் அவருக்குக் கிடைக்க வில்லை என்றே சொல்லலாம்.
நாயகியாக கயாடு லோஹர் கிளாமர் கியூன் ஆக வருகிறார். நடிப்பும் அருமை. அவரது சிரிப்பும், டயலாக் டெலிவரியும் ஆண்ட்ரியாவை நினைவுபடுத்துகிறது. தமிழில் இவர் நடிக்க ஒப்பந்தமான முதல் படம் இதுதான் (ஆனால் சில படங்கள் ரிலீசில் முந்திக்கொண்டன)
லொள்ளு சபா மாறன், டி.எம் கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர் ஆகியோர் காமெடி செய்கிறார்கள்.
2 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் சாம்.சி எஸ். ஓக்கே ரகம். பின்னணி இசை மிரட்டல் ரகம்.
அருண் ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அட்டகாசம். நாயகியின் க்ளோசப் ஷாட்கள் அருமை. திகில் கிளப்பும் காட்சிகளும். வெல்டன் கேமரா ஒர்க் என சொல்ல வைக்கிறது.
எம் ராஜேஷின் எடிட்டிங்கில் படம் 131 நிமிடங்கள் ஓடுகிறது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா தான் இயக்கி இருக்கிறார்.
சபாஷ் டைரக்டர்
முதல் பாதி முழுக்க நாயகன், நாயகி ரொமான்சுக்கு முயற்சிக்கும் முன்னெடுப்புகள் என்பதால் ஜாலியாக நகர்கிறது. நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
நாயகியின் அழகும், கிளாமரும் படத்துக்குப்பெரிய பிளஸ். அந்தக் கேரக்டரில் ஒரு மர்மம் இருக்கிறது என்று தெரிந்தபின் சுவராஸ்யம் கூடுகிறது.
மலையாளத்தில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட்டான லோகா சேப்டர் 1, ஜிவிபி நடித்த டார்லிங்க், ஜீவா நடித பிளாக் இந்த மூன்று படங்களின் கதை போலவா? இல்லை, வேறு மாதிரி கதையா? என்பதை இயக்குநர் கொண்டு போன விதம் அருமை.
ஹாரர் திரில்லர் படங்களுக்கே உரித்தான மிரட்டும் பின்னணி இசை சாம்.சி.எஸ் கச்சிதமாக உருவாக்கி இருக்கிறார்.
இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ட்விஸ்ட்டும், க்ளைமாக்சும் குட்.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
லோ பட்ஜெட் படம் என்பதால் மான்ஸ்டர் வரும் காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஆகாஷ் என்ற கேரக்டர் நாயகியைப்பற்றிய ஒரு ரகசியத்தை நாயகனிடம் முதல் முறை கூறும்போது அதை சட்டை செய்யாத நாயகன் இரண்டாம் முறை கூறும்போது அப்போதுதான் கேட்ட மாதிரி ஜெர்க் ஆவது ஏன்?
ஆகாஷ் கேரக்டர் நாயகனுக்கோ, ஆடியன்சுக்கோ அந்த ரகசியத்தை ஓப்பன் செய்யாமல் விட்டிருந்தால் படம் இன்னமுமே சஸ்பென்ஸ் ஆக இருந்திருக்கும்.
எல்லாரையும், எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நாயகி அந்த ஆகாஷ் கேரக்டர் நாயகனிடம் நாயகியைப்பற்றிய ரகசியத்தை சொல்லும்போது ஏன் தடுக்கவில்லை? அல்லது ஏன் சொல்ல விட்டார்? என்பதற்கு பதில் இல்லை.
நாயகன் மூலம் ஒரு அபூர்வமான குழந்தையைப் பெற்றுக் கொள்வதுதான் நாயகியின் நோக்கம் எனில் அதை செயல்படுத்த ஏன் தாமதம்? யார் அதை தடுக்கிறார்கள்?
ரசித்த வசனங்கள்
ஹலோ... சார். ஷேரிங்க் ரூம் பார்க்கறீங்களா?
எஸ்... எத்தனை பசங்க?
நான் மட்டும் தான் (ஹஸ்கி வாய்சில் நாயகி)
என்னடா? உன் ரூமைக்காட்றேன்னு சொல்லிட்டு பைவ் ஸ்டார் ஹோட்டலைக்காட்றே?
என்ன பொண்ணுடா அவ.. தம் கேட்டா தம் தர்றா.. பீடி கேட்டா பீடி தர்றா.
பார்க்க லட்சணமா இருக்கா-னு சொல்றே. லட்ச லட்சமா பணம் வெச்சிருக்கானு சொல்றே. அவளையே கரெக்ட் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கோ.
நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே எப்படியும் தப்பாதான் கேட்கப்போறே...
டேய்... என்னை மாதிரி ஒரு அழகான பையனும், தேவதை மாதிரி ஒரு பெண்ணும் பக்கத்து பக்கத்து ரூமில் இருந்தா எப்படி இருக்கும்? எனக்கு வயித்தெரிச்சலா இருக்கும்.
மிஸ்... என் ரூமில் கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கு... என் ரூமில் வவ்வால் தொல்லை இருக்கும், பரவாயில்லையா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க் - 16+ ( அனிமேட்டட் வெர்சனில் ஒரு லிப் லாக் சீன் இருக்கிறது)
கல்கி கமெண்ட் - தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி. வழக்கமாக பாழடைந்த பங்களாவில் மாட்டிக் கொள்ளும் நான்கு பேர் கான்செப்ட்டிலிருந்து விலகி புதிய முயற்சி இது. கலகலப்பான, விறுவிறுப்பான முன் பாதி, அமானுஷ்யங்கள் நிறைந்த பின் பாதி என சரியான மிக்சிங்க்.